கிரைம்சிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

பதுக்கல்காரர்களின் கிறுக்குப்பிடியில் பீடி,சிகரெட்,குட்கா பயன்பாட்டாளர்கள்?தமிழகம் முழுவதும் எங்கும் கிடைக்காது என்ற மாயபிம்பம் உருவாக்கி பதுக்கல்?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதுக்கல்காரர்களின் கிறுக்குப்பிடியில் பீடி, சிகரெட், குட்கா பயன்பாட்டாளர்கள்:

advertisement by google

தமிழகத்தில் பீடி,சிகரெட் பதுக்கல்காரர்களிடத்தில் சிக்கி கரும்புச் சக்கையாக பிழிந்தெடுக்கப்படும் புகைப்பான் விரும்பிகள்:

advertisement by google

தமிழக மாவட்டம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட ஏஜென்சிகள்,பெரிய வணிகர்கள், பண முதலைகள் கொரோனா, ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக்கி பீடி,சிகரெட்,தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வாகன இயக்கம்,ஊரடங்கு, எங்கும் கிடைப்பதில்லை என்ற மக்களிடத்தில் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி தரமாக யோசித்து லாவகமாக,பதுக்கி வைத்துக் கொண்டு மாவட்டம் முழுவதும் இவர்களின் கண்,கை அசைவினால் பீடி, சிகரெட்,குட்காவின் விலையானது தினமும் புதுப்பொலிவுடன், புதுப் பரிமாணமாக உருவெடுத்துள்ளது.

advertisement by google

புகைப்பிடிக்க பல காரணங்கள்:

advertisement by google

கவலையா? ஒரு புகை,

advertisement by google

இன்பமா? ஒரு புகை,

advertisement by google

தேநீர் பருகியதும் ஒரு புகை,

advertisement by google

உணவருந்தியதும் ஒரு புகை,

ஒருவேளை உணவு கட் என்றாலும் ஒரு புகை,

காத்திருக்கையில் ஒரு புகை,

நண்பனோடு ஒரு புகை,

நண்பர்களோடு ஒரு புகை,

வேலை கடினமா? ஒரு புகை,

வேலை எளிதா? ஒரு புகை,

   இவ்வாறாக, பீடி,சிகரெட்,குட்கா வகைகளுக்கு அடிமையான மக்களிடத்தில் விற்பனை செய்யும் ஏஜென்சிகள், பணமுதலைகள்,  மற்றும் பெரிய வணிகர்கள் கொள்ளை இலாபம் ஈட்டும் நோக்கில் பீடி,சிகரெட், குட்கா வகைகளை பதுக்கி வைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் பணத்தை எமதர்மனின் கயிற்றைக் கொண்டு சிறுக,சிறுக இறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்

புகை நமக்குப் பகை என்பார்கள்.ஆனால், காலப்போக்கில் புகைப்பழக்கத்திற்கு அடிமையா(க்கப்பட்ட)னவர்கள் இடத்தில் புகையே நம் உடன்பழகும் நெருங்கிய நண்பனாக மாறிவிட்ட சூழல் தற்போது காலகட்டத்தில் உருவாகிவிட்டது.

    தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புகையிலை மற்றும் புகைப்பான்களின் விலையானது கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு மிகாமல்  "நாள் ஒன்றுக்கு காலை ஒரு விலை,மாலை ஒரு விலை"யென கொரோனா  பதுக்கல்காரர்களால் உயர்த்தியும்,உயர்ந்தும் விண்ணைத் தொட்டு

முட்டி நிற்கின்றது.

தற்போது,கடந்த 25 நாட்களாக தேனி மாவட்டம் முழுவதும்,பீடி,சிகரெட் வகைகள் முழுவதும் தரமான பதுக்கல்காரர்களின் சாமர்த்தியத்தால் கோவிட் -19, ஊரடங்கினை சாதகமாக்கி தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது மாதிரியான விலை உயர்வால் அரசு மேற்கோள்ளும் நடவடிக்கைகளுக்கும், தண்டனைகளுக்கும் ஆளாவது என்னவோ, சில்லரை விற்பனை வணிகர்கள் தான்…..
அவ்வாறான, பதுக்கல்காரர் களிடமிருந்து வேறு வழி தெரியாமல் வாங்கி விற்பனை செய்யும் சூழ்நிலைக்கு ஆளான சில்லரை வியாபாரிகளின் விலை நிலவரம்:

  கொடிய வைரஸ், ஊரடங்கு இதை தங்களுக்கு  சாதகமாக்கிய பதுக்கல்காரர்களினால்

முன்னதாக ரூ.7க்கு விற்கப்பட்ட கோல்டு பிளாக் விலை தற்போதுரூ12,13 க்கும்,ரூ.10க்கு விற்கப்பட்ட கோல்டு பில்டரின் விலை தற்போதுரூ15,16 க்கும்,ரூ.16க்கு விற்கப்பட்ட கிங்ஸின் விலை தற்போதுரூ23,25 க்கும்,ரூ.15க்கு விற்கப்பட்ட செய்யது பீடி கட்டின் விலை தற்போதுரூ23,25 க்கும்,ரூ.18க்கு விற்கப்பட்ட பூமார்க் பீடியின் விலை தற்போது ரூ.26க்கும், தடை செய்யப்பட்ட ஒரு குட்காவின் விலை தற்போது பத்து மடங்காக உயர்ந்து ரூ120,150ற்கும் விற்கப்பட்டு வருகிறது.
பதுக்கல்காரர்களால் பீடி,சிகரெட் மீதான விலைகள் இவ்வாறாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என விலையை உயர்த்தி சில்லரை விற்பனையாளரிடத்தில் தந்திரமாக விற்கப்பட்டும்,வேறு வழி தெரியாத சில்லரை வியாபாரிகளும், வாங்கி விற்பனை செய்தும் வருவதால், சில்லரை விற்பனையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் தினம் ஒரு கார்கில் போரே அரங்கேறி வருகிறது.

இது மாதிரியான விலை உயர்விற்கு, சில்லரை வியாபாரிகள் தான் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.மாறாக,இதற்கு மூளையாக செயல்பட்டுவரும் பதுக்கல்காரர்கள் பதுங்கியும், பணம் எனும் பிணத்தை பதுக்கியும்,செழிப்போடு இன்றளவும் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

புகைப்பிடித்தலென்பதுஉடலுக்கு தீங்கானது விட்டொழித்துவிட வேண்டுமென புகைப்பிடிப்பவர்களின் உள்மனம் கதறுகிறது. ஆனால், முடியவில்லை புகையை நாம் விட நினைத்தாலும், புகை எனும் பகை நம்மை விடுவதில்லை.

    *எது எப்படியோ? அரசு அறிவிக்கும் எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும், செயல்பாட்டிற்கும் பதுக்கல்காரர்களும், பண முதலைகள் மட்டுமே எல்லாவிதத்திலும் பயன் அடைகிறார்கள்*. 

ஆனால்,அதே அரசால் எவ்வித பலனும், பயனும் இல்லாமல் முதலிடத்தில் விவசாயிகளும், இரண்டாமிடத்தில் சாதாரண ஏழை மக்களும் தான் பல வழிகளில் இன்னல்களை அனுபவித்தும், மன,பண அழுத்தத்திற்கு உள்ளாகியும், நஷ்டப்பட்டும் தினம்,தினம் அவஸ்தைகளுக்கும் உள்ளாகி,தத்தளித்து வருகின்றனர்.

“புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு”
என்ற வாசகம் மறுத்து போய்,இந்தக் கொரோனா காலத்தில் தேனி மாவட்ட புகைப்பான் மற்றும் புகையிலை விரும்பிகள் வட்டிக்கு வாங்கியாவது புகைப்பிடித்து தங்களின் உயிர்,உடல், மற்றும் உடைமைகளை இழந்தும் பெரும் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பான துறை அதிகாரிகள் கடந்த 25 நாட்களாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று புகைப்பான், புகையிலை பயன்படுத்துவோர் கேள்வி எழுப்புவதோடும், பதுக்கல்காரர்களை இனம் கண்டு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு
விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்.

கொரோனா பீடி, சிகரெட்,புகையிலை பதுக்கல் வியாபாரிகளே, இது பண்டிகை காலம் அல்ல…பட்டினி காலம்…என்பதை உணருங்கள்..

advertisement by google

Related Articles

Back to top button