கிரைம்

?முகம்மா உண்மை சம்பவம்?

advertisement by google

ஆந்திராவில் உள்ள குண்டூர் தாதேபள்ளி காவல்நிலையத்தில் தங்கியிருந்து, இரவு, பகல் எனப் பாராமல் அங்கிருப்பவர்களுக்குத் தேவையான உதவிகள் என அனைத்தையும் 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக அவர் உயிரிழந்ததையடுத்து, அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் இணைந்து நிதி திரட்டி அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளனர்.

advertisement by google

தற்போது அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் மட்டுமின்றி, இதே காவல்நிலையத்தில் தனது பணியைத் தொடங்கியவர்கள், அடுத்தடுத்த உயரிய பொறுப்புகளுக்குச் சென்றவர்கள் என அனைவரும் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

advertisement by google

funeral.

advertisement by google

இதில் சிலர் தற்போது டி.எஸ்.பி-யாகவும் உள்ளனர். காவல் நிலையத்திலிருக்கும் யாருக்கும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் தெரியாது. அந்தப் பெண்ணுக்குச் சரியாக பேசவும் வராது. காவல் நிலையத்திலிருப்பவர்கள், அவரை அன்புடன்,முகம்மா' என்று அழைத்தனர். மேலும், அவர் அங்கே மரியாதையுடன் நடத்தப்பட்டார். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் கணவர் இறந்து விட, காவல்நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கிக் கொண்டார். ஆதரவற்ற அவர், காலை நேரங்களில், காவல் நிலையத்தில் பணி செய்து வந்தார்.காவல்நிலையத்தில் எந்த வேலையாக இருந்தாலும், அதைச் செய்ய அவர் எப்போதும் தயாராக இருந்தார்’ என்கிறார் ஓய்வு பெற்ற ஏ.எஸ்.பி ஒருவர்.

advertisement by google

1988-ம் ஆண்டு தாதேபள்ளி காவல் நிலையத்துக்கு அருகில் அந்தப் பெண் தங்கியிருப்பதைப் பார்த்த எஸ்.ஐ ஒருவர், தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்த்தார். மீதியுள்ள நேரத்தில் அந்தப் பெண், காவல் நிலையத்தில் இருக்கும் வேலைகளைச் செய்து வந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ வேறொரு இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட, தனது கடைசி மூச்சுவரை அந்தக் காவல் நிலையத்திலே பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார் அந்தப் பெண்.

advertisement by google

முகம்மாவுக்கு அந்தக் காவல் நிலையத்தில் இன்னொரு வேலையும் இருந்தது. அதாவது, பெண் காவலர்கள் லீவு எடுக்கும் போது, சிறையிலிருக்கும் கைதிகளை இவர் கவனித்துக் கொள்வார்” என்று இறுதிச் சடங்குக்கு வந்திருந்த காவல் அதிகாரி ஒருவர் நினைவு கூர்கிறார்.

advertisement by google

Mugamma.
தாதேபள்ளி எஸ்.ஐ நாராயணா பேசுகையில், முகம்மாவைப் பொறுத்தவரை, ஊழியர்களுக்கு மற்றொரு தாயைப் போல. நாங்கள், எங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கும் போது, மதிய உணவு நேரம் நெருங்கியதும் எங்களுக்கு நினைவுபடுத்தி, சாப்பிடச் சொல்வார். இந்தக் காவல்நிலையத்தில் இருக்கும், ஒவ்வோர் ஊழியர் மீதும், அவர் அக்கறை செலுத்துவார். அவருக்கு உடல்நலம் பாதித்த போது 4 முறை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். கடைசியாக அவரை நான் பார்த்த போது, சைகையில் என்னிடம் முகம்மா பேசினார்” என்கிறார். இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். உடனே காவல் நிலையத்தில் பணிபுரிந்த மற்ற காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முகம்மாவுக்குப் பிரியாவிடை கொடுக்க ஏராளமான காவலர்கள் ஒன்றிணைந்து தேவையான சடங்குகளைச் செய்தனர். இறுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button