கிரைம்சிரிக்க சிந்திக்க

?வண்டிய ஓரங்கட்டு?

advertisement by google

?வண்டிய ஓரங்கட்டு…வண்டிய ஓரங்கட்டு…”
“என்ன சார்…என்னாச்சு? அதான் ஹெல்மெட் போட்ருக்கேனே…”
“ஹெல்மெட் போட்ருக்கே…ஆர்சி புக் எங்கே?”
“இந்தாங்க..இந்த கவருக்கு உள்ளே இருக்கு…”
“இன்சூரன்ஸ்?”
“சார்…அதுவும் அந்த கவர்ல தான் இருக்கு…அடுத்து டிரைவிங் லைசென்ஸ் கேப்பீங்க… லைசென்ஸ் மட்டுமில்ல..என்னோட ஆதார் கார்டு,பேன்கார்டு, பாஸ்போர்ட் காப்பின்னு சகலமும் அதுக்குள்ள இருக்கு…அட இவ்வளவு ஏன் சார்…முந்தாநேத்து தான் வண்டிய சர்வீஸ் விட்டு இன்ஜின் ஆயில்,கியர் ஆயில்,ஏர் செக்கப் எல்லாம் செஞ்சேன்…அதுக்கான பில் கூட அந்த கவர்ல இருக்கு..நான் எந்த வகைலயும் டிராபிக் ரூல்ஸை மீறல…பொல்யூஷன் உண்டாக்கல….போதுமா…நான் போலாமா சார்..‌”
“இருக்க தம்பி… 2500 ரூவா பைன் கட்டிட்டு போங்க…”
“எதுக்கு சார்…அதான் எல்லாத்தையும் காட்டியாச்சே….?”
“எல்லா டாக்குமெண்ட்ஸையும் காட்டுனீங்க…அந்த டாக்மென்ட்டுகளை வச்சுருந்தீங்கள்ல ஒரு பிளாஸ்டிக் கவர்…அதை தடை செஞ்சு 9 மாசமாச்சு…அதுக்கு தான் இந்த 2500 ரூவா பைன்…சுற்றுச்சூழலை கெடுத்ததுக்காக பைன் கட்டிட்டு போங்க….”???

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button