இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்தி

காலைவிரிவான செய்திகள்(12.9.2019)

advertisement by google

[9/12, 5:58 AM] விண்மீண்நியூஸ்2: ®® வெளிநாடு பயணம் மூலம் ரூ.8,895 கோடி முதலீடு: கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

advertisement by google

கோவை: வெளிநாடு பயணம் மூலம் ரூ.8,895 கோடி முதலீடு கிடைக்க உள்ளது என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 41 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. புதிய முதலீடுகள் மூலம் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

advertisement by google

®®ஊடகதளம்
[9/12, 5:58 AM] விண்மீண்நியூஸ்2: ®®தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை; தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது

advertisement by google

என்னுடைய வெளிநாட்டுப் பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது

advertisement by google
  • முதல்வர் பழனிசாமி

®®ஊடகதளம்
[9/12, 5:58 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

advertisement by google

?கடல் கடந்து தமிழரான ஈபிஎஸ் சாதனை படைத்துள்ளார்

advertisement by google

?சென்று வென்று வாருங்கள் என்பதற்கே வரலாற்றுச் சாதனையை முதல்வர் செய்துள்ளார்

advertisement by google

?யதார்த்தம், சத்தியம், உண்மையை கூறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளார் முதல்வர் பழனிசாமி

?அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
[9/12, 5:58 AM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

? கனடா நாடாளுமன்றத்தை கலைத்தார் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

? நேரலை செய்திகள்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®® சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமா டிக்கெட் விற்பனையாகும்போதே ஜி.எஸ்.டி. தொகையை அதற்குரிய கணக்குக்கு செல்ல கணினியில் வகை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?சேலம் மாவட்டத்தில் அமையவுள்ள சர்வதேச கால்நடை பூங்காவிற்கான திட்ட அறிக்கை ஒரு மாதத்தில் தயாரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும்.

?தலைவாசலில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் பேட்டி
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

சேலம், செப்.11: சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாநகர், மாவட்ட அதிமுக செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம்-தனலட்சுமி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சேலம் வந்தார். முன்னதாக மாவட்ட எல்லையான சங்ககிரியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கலெக்டர் ராமன் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் அவரது இல்லத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® சேலம் மேற்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணிக்கு 60 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு

இடைப்பாடி, செப்.11: சேலம் மேற்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணிக்கு 60 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இளைஞரணி ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். அவைத்தலைவர் கோபால், துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், கீதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், அம்மாசி, நெசவாளரணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை சிறப்புரையாற்றினார். மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தி, ஒவ்வொரு தொகுதிக்கும் 20 ஆயிரம் பேர் வீதம், மேற்கு மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேரை உறுப்பினராக சேர்ப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பரமசிவம், ரவிச்சந்திரன், நல்லதம்பி, பாஷா, ராஜேஷ், பச்சமுத்து, காசிவிஸ்வநாதன், இளைஞரணி அமைப்பாளர்கள் செந்தில்குமார், முத்தமிழ்செல்வன், நிர்வாகிகள் தங்கவேலு, மாதையன், சிங்காரவேலு, ராமலிங்கம், ரவி, சரவணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®திருவண்ணாமலையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

சேலம், செப்.11:சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகித்தார். பொருளாளர் சுபாஷ், சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாள் விழா என முப்பெரும் விழா வரும் 15ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது. இதில் மத்திய மாவட்ட திமுக சார்பில், திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள செல்போன் ஆப்பை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் திமுக நிர்வாகிகள் முனைப்போடு ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சூடாமணி, ராஜேந்திரன், வழக்கறிஞர் கார்த்திகேயன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், அவைத்தலைவர் முருகன், நிர்வாகிகள் அண்ணாமலை, திருநாவுக்கரசு, லலிதா, கணேசன், பச்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடந்த இளைஞரணி ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் அறிவழகன் தலைமை வகித்தார். மாநகர அமைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை கலந்து கொண்டு, இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® கோயில் விழா நடத்துவதில் பிரச்னை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

கெங்கவல்லி, செப்.11:கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டியில், கடந்த 40 ஆண்டுகளாக பொன்னர் -சங்கர் தெருக்கூத்து நாடக தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி பகுதியில் உள்ள சக்கரத்தாழ்வார் பெருமாள் கோயில் முன்பு, மழை வேண்டி தெருக்கூத்து கலைஞர்கள் சார்பில் இந்த விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், இருதரப்பு மோதல் காரணமாக, இந்த ஆண்டு தெருக்கூத்து நாடக தேர்த்திருவிழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில், தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால், நேற்று கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவக்கொழுந்து, டிஎஸ்பி ராஜூ தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டம் தோல்வியில் முடிந்தது.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®® இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொது தொகுப்பில் உள்ள மாணவர்களின் விவரங்களை வைத்து இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. பள்ளி விட்டு வேறு பள்ளி சென்ற மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®® புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் 30 பேர் மர்மகாய்ச்சலால் பாதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் 30 பேர் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேரும் புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®® கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. சின்னசேலம், சங்கராபுரம், கச்சிரப்பாளையம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுர், மருச்சுக்கட்டி உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெரிது வருகிறது.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® சேலத்தில் ஒரே நாளில் துணிகரம் 2 பெண்களிடம் 16 பவுன் நகை பறிப்பு

ேசலம், செப்.11: சேலம் மாசிநாயக்கன்பட்டி அப்பு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வித்யா(65). இவர் நேற்று முன்தினம், தனது வீட்டு வாசல் முன்பு பூப்பறித்து கொண்டிருந்தார். அப்போது இந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவரும், துணியால் முகத்தை மறைத்து கட்டிக் கொண்டு ஒருவரும் வந்தனர். அப்போது, அவர்கள் பூப்பறித்துக் கொண்டிருந்த வித்யா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அவர் நகையை தனது கைகளால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர்கள் 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து வித்யா அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மனைவி கலைச்செல்வி(35). சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் உறவினர் திருமணத்தில் பங்கேற்க, ராமலிங்க வள்ளலார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள், கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். உடனே, கலைச்செல்வி சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர்கள் பைக்கில் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கலைச்செல்வி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®® கரூர் அருகே நெரூர் காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே நெரூர் காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். காவிரி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி வங்கி ஊழியர், கல்லூரி மாணவர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® 4வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு பூலாம்பட்டி காவிரி கரையோரம் பாதுகாப்பு ஏற்பாடு மும்முரம்

இடைப்பாடி, செப்.11: பூலாம்பட்டி காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுவதால், 4வது நாளாக படகு போக்குவத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி, விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பூலாம்பட்டி பகுதியில் இருகரைகளையும் தொட்டவாறு காவிரி பெருக்கெடுத்துச் செல்கிறது. இதையடுத்து, பூலாம்பட்டி- ஈரோடு மாவட்டம் நெறிஞ்சிப்பேட்டை இடையே, நேற்று 4வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும்,

வெள்ளப்பெருக்கை பார்க்க வருவோர் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி கரையோரம் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®அதிகாலையிலிருந்தே நியாய விலை கடை முன்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பை வைத்து இடம்பிடிக்கும் கிராமமக்கள்

அயோத்தியாப்பட்டணம் :சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி அருகே சந்திரபிள்ளைவலசில் பணியாளர்கள் தாமதமாக வருவதாலும் ,நியாய விலை கடைபொருள்கள் அனைவருக்கும் சரியாக கிடைக்க படாததாலும் மற்றும் குறைந்த நாட்களே நியாய விலை கடை திறக்கப்படுவதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இடம் பிடிக்கும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையால் அன்றாடம் வேலைக்குச் செல்வோரும்,முதியோர்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர். இம்முறையில் இடம் பிடிப்பதால் பொதுமக்கள் அவர்களுக்குள்ளே தகராறு ஏற்படும் நிலை ஏற்படுகிறது .இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®®ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாள் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

®®இந்திராணி முகர்ஜி அளித்துள்ள தகவலின் அடிப்படையில் பெருமாளிடம் விசாரணை நடக்கவுள்ளதாக தகவல்

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®தீக்குளித்த இளம்பெண் சாவு

சேலம், செப். 11: சேலம் இரும்பாலை மோகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரியா (28). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் 10ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பிரியா கணவருடன் குடும்ப நிகழ்ச்சிக்காக சேலத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரியா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

சேலம், செப்.11: சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் திமுக கட்சி அலுவலகம் கலைஞர் மாளிகை வீரபாண்டியார் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மாநில துணை செயலாளர் வக்கீல் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தந்தை பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் திமுக இயக்கம் ேதாற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா வரும் 15ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. இதில் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®கெங்கவல்லியில் மழை

கெங்கவல்லி, செப்.11: கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த நிலையில், நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குடிநீர் பிரச்னை நிலவும் நேரத்தில், ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சேலம் மாநகரில் இரவு 8 மணியளவில் பெய்த மழையால் ஜில் க்ளைமேட் நிலவியது.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®® அரும்புக்கோட்டை அருகே பாலைவனத்தம் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அரும்புக்கோட்டை: அரும்புக்கோட்டை அருகே பாலைவனத்தம் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்னல் தாக்கியதில் பிரதீப்(26) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

®®ஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®ஆணைமடுவு நீர்த்தேக்கத்திற்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை

வாழப்பாடி, செப்.11: வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில் உள்ள ஆணைமடுவு நீர்த்தேக்கம், 67 அடி உயரம் கொண்டதாகும். 267 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 5012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், கால்வாய் பாசனத்தின் மூலம் 5 தாய் கிராமங்கள் உள்பட சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களும் பயனடைகின்றன. ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இந்த அணைக்கு காவிரி உபரிநீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், ஆணைமடுவு அணைக்கான நீர்வரத்து முற்றிலும் சரிந்து, நீர்மட்டம் 12 அடியாக குறைந்துள்ளது. இதனால், அணையின் மையப்பகுதியில் மட்டும் குட்டைபோல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த அணையை நேற்று கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பி கவுதம சிகாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீர், வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க, சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விட வேண்டும். குறிப்பாக ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் ஆணைமடுவு நீர்த்தேக்கத்திற்கு, காவிரி உபரிநீரை கொண்டு வருவதன் மூலம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளும் பயனடைவர். இது குறித்து, மத்திய அரசின் கவனத்திற்கும், நீர்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளேன். மேலும், கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட உள்ளேன்.

winmeennews.comஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®® கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

winmeennews.comஊடகதளம்
[9/12, 6:04 AM] விண்மீண்நியூஸ்2: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® ஐஓசி., சிறப்பு அறிவிப்பு 50 லி., டீசல் நிரப்பினால் பரிசாக மினி டிரக்

சேலம், செப்.11: ஐஓசி மற்றும் டாடா நிறுவனம் இணைந்து 50 லிட்டர் டீசல் நிரப்பும் வாகனம் உரிமையாளர்களுக்கு டாடா அல்ட்ரா, டாடா ஏசிஇ கோல்டு வாகனங்கள் பரிசாக வழங்குகிறது. இதற்கான தொடக்க விழா கந்தம்பட்டியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெட்ரோல் வங்கியில் நடந்தது. விழாவுக்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் தலைமை வகித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சேலம் முதன்மை விற்பனை மேலாளர் சிவக்குமார், முதுநிலை மேலாளர் அப்பாண்டீராஜன், சரத்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முதுநிலை மேலாளர் அப்பண்டிராஜன் கூறியதாவது: டீசல் விற்பனையை ஊக்குவிப்பதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களிலும் எஸ்எம்ஸ் அடிப்படையிலான விற்பனை பிரசாரத்தை நடத்தி வருகிறோம். பிரசார காலம் நேற்று (10ம்தேதி) முதல் டிசம்பர் 8ம் தேதி வரையாகும். ஒரு முறை 50 லிட்டர் அல்லது அதற்கு மேல் டீசல் நிரப்ப வேண்டும். பிறகு 99114-10000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒரு மொபைலில் இருந்து 2 முறை மட்டுமே ஒரு நாளுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இரண்டு நாளுக்கு ஒரு முறை, ஒரு டாடா ஏசிஇ கோல்டு (மினி டிரக்) பரிசாக கிடைக்கும். மேலும் மாதம் ஒருமுறை ஒரு டாடா அல்ட்ரா (எம்சிவி) பரிசாக கிடைக்கும். மொத்தில் 45 டாடா ஏசிஇ கோல்டு, 3 டாடா அல்ட்ரா கிடைக்கும். 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா பவர் மூலம் ₹1000 மதிப்புள்ள இலவச டீசல், பிரிண்டட் பில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். பரிசு வெல்வதற்கு அசல் பில் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

?Winmeennews.comஊடகதளம்?

advertisement by google

Related Articles

Back to top button