இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

?மாலைநேர விரிவான செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம்?

advertisement by google

???விண்மீண்நியூஸ்???
???தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் விரைவில் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.*
தமிழகத்தில் புதிய மின்இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடைசியாக கடந்த 2004ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

advertisement by google

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய மாநில ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்டணம் உயர்வு குறித்து முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, வீட்டு உபயோக சிங்கிள் பேஸ் ஒரு கிலோவாட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 200 முதல் 1000 வரை பாதுகாப்பு கட்டணம் உயரலாம் என்றும் இதே மூன்று பேஸ் இணைப்பு பெறுவோருக்கு கட்டண உயர்வு என்பது ஒரு கிலோவாட்க்கு 600 முதல் 1800 வரை உயர வாய்ப்பு உயரலாம் என்றும் தெரிகிறது. 18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய மோட்டார் வாகனத்தில் அதிர்ச்சி அறிவிப்பு இதேபோல் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது. தற்போது வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஒரு கிலோவாட் புதிய மின் இணைப்பிற்கு 500 ரூபாய் இருக்கும் கட்டணம் 2000 ரூபாயாக உயரக்கூடும். உயர்ந்த மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோவாட் தற்போது 800 ரூபாய் என்று உள்ள நிலையில், 3100 ரூபாயாக உயர உள்ளதாம். தற்போது மின்சார பிரச்னை ஏற்பட்டால் மின் ஊழியர்கள் வந்து ஆய்வு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் ஆய்வு செய்வதற்கு வீட்டு உபயோக இணைப்புக்கு 580 முதல் 1920 வரை கட்டணம் வசூலிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் 3 பேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு 3,810 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.பொதுமக்களிடம் கருத்து கேட்டபிறகு கட்டண உயர்வு அமலுக்கு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறினார்,
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ???கரம் கொடுத்த தெர்மல் இமேஜ்… விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்! விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிப்பதற்காக நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரை நிலவின் அருகே கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

advertisement by google

நிலவின் தென்துருவத்தில் தண்ணீர், தாதுக்கள், கனிமங்கள் ஆகியவை குறித்து கண்டறிய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தினர். இந்த விண்கலம் ஆர்பிட்டர், விக்ரம், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது.விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து லேண்டரும், அதில் உள்ள ரோவரும் கடந்த 2-ஆம் தேதி தனியாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை 1.54 மணிக்கு சந்திரனில் இருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க விஞ்ஞானிகள் முயற்சித்தனர்.

advertisement by google

அம்மா சாவில் கூட இல்லை’.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ

advertisement by google

அசம்பாவிதம்ஆனால் நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 2.1 கி.மீ. இருந்த போது லேண்டருடனான இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் தரையிறங்கியதா, இல்லை ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் மனவேதனை அடைந்தனர்.விஞ்ஞானிகள்இந்த நிலையில் நிலவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர், லேண்டர் இருக்கும் இடத்தை நேற்று புகைப்படமாக எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பியது. இதனால் விஞ்ஞானிகளுக்கு புது தெம்பு பிறந்தது.சுற்றி வரும் ஆர்பிட்டர்பின்னர் லேண்டரின் தொடர்பை பெற முயற்சிக்கப்படும் என இஸ்ரோ சிவன் தெரிவித்தார். இந்த நிலையில் நிலவை 100 கி.மீ. தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் சுற்றுவட்ட பாதையின் தூரத்தை 50 கி.மீ. ஆக மாற்ற இஸ்ரோ முடிவு செய்துள்ளது.முயற்சிஇதன் மூலம் தொடர்பை இழந்த லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்பதால் இஸ்ரோ இந்த யோசனையில் இருக்கிறது. அதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® பொன்னேரி மீனவளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

advertisement by google

பொன்னேரி: பொன்னேரி மீனவளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் சுயநிதி மீள்வளக் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்ததை கண்டித்து மீன்வளக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

advertisement by google

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி பேருந்து மோதி 7-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

advertisement by google

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்து கேத்துரெட்டிப்பட்டியில் கல்லூரி பேருந்து மோதி 7-ம் வகுப்பு மாணவி நித்யா உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் ஜெய்ஷ்-இ-முகமதுவை காவலில் இருந்து விடுவித்தது பாகிஸ்தான்

இஸ்லாமபாத்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் ஜெய்ஷ்-இ-முகமதுவை காவலில் இருந்து பாகிஸ்தான் விடுவித்தது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை தடுப்புக் காவலில் பாகிஸ்தான் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® ராஜபாளையம் கீழ் ஆவரம்பட்டியில் உள்ள விசைத்தறி கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

ராஜபாளையம்: ராஜபாளையம் கீழ் ஆவரம்பட்டியில் உள்ள விசைத்தறி கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. விசைத்தறி கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்களுக்கு ராஜபாளையம் வடக்கு போலீஸ்சார் வலை வீசி தேடி வருகின்றனர்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® ஓகேனக்கலில் நீர்வரத்து அதிகம் இருப்பதால் பரிசில் இயக்க தடை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஓகேனக்கலில் காலை 9 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகம் இருப்பதால் பரிசில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றி திரிந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றி திரிந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கணேசன், சசிகலா, பாண்டீஸ்வரி உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து 40 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்திறப்பு அதிகரித்தள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரோ! பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ட்வீட்

சென்னை: நிரபராதியை விடுதலை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரோ! என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ட்வீட் செய்துள்ளார்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® டெல்லியில் ராம்ஜெத் மலானி மறைவுக்கு திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் துக்கம் விசாரிப்பு

டெல்லி: டெல்லியில் ராம்ஜெத் மலானி மறைவுக்கு திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் துக்கம் விசாரித்தார். டெல்லியில் ராம்ஜெத் மலானி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கூறினார்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் இன்று விசாரணை இல்லை

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டடங்கள், நில ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி நடவடிக்கை உட்பட 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

?சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சந்திப்பு.

? நேரலை செய்திகள்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

? தஞ்சையில் இருந்து 41 அரிய வகை புள்ளி மான்கள் கோடியக்கரை வனச்சரகத்திற்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது .

?முதல் கட்டமாக இன்று 8. பெண் மான்கள் கால்நடை மருத்துவர்களுடன் கொண்டு செல்லப்படுகிறது
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்திப்பு

சென்னை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் சென்னையில் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்தித்துள்ளனர். சென்னை, சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன் பொதுமேலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக அறிவிப்பு

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக அறிவித்துள்ளது. டெபாசிட்டுகளுக்கு அளிக்கும் வடிவிகித அடிப்படையிலான கடன்வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது. தற்போது 8.25 சதவீதமாக உள்ள கடன் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக குறைக்கப்படுவதாக எஸ்.பி.ஐ. தகவல் அளித்துள்ளது.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® காவிரி குடிநீருக்கு தட்டுப்பாடு; வினியோகித்தாலும் செந்நிறம்

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையத்தில், போதிய அளவில் குடிநீர் வினியோகிக்கவில்லை. 15 நாளுக்கும் ஒருமுறை வினியோகிப்பதும், செந்நிறத்தில் வருவதால், குடிக்கவே அச்சப்படுகின்றனர். பெத்தநாயக்கன்பாளையத்தில், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி ஊராட்சிகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சில நாட்களாக, மழை பெய்தும், அப்பகுதிகளில், 15 நாளுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், போதிய குடிநீரின்றி மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், அந்த தண்ணீரும், சேறு, சகதியாக, செந்நிறத்தில் வருகிறது. இதனால், அதை குடித்தால், நோய் ஏற்படுமோ என்ற அச்சத்தில், குடிக்க முடியாமல் தவிக்கின்றனர். அதனால், மூன்று நாளுக்கு ஒருமுறை, குடிநீரை முறையாக சுத்திகரித்து, வினியோகிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® விபத்தில் 2 பேர் பலி: பஸ் டிரைவர் கைது

வாழப்பாடி: வாழப்பாடி, காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, கவர்கல்பட்டியைச் சேர்ந்த, விவசாயி பழனிசாமி, 62; இவரது பேரனுக்கு, கடந்த வாரம், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது. அங்கு, திருமண பதிவுச்சான்றிதழ் பெற, நேற்று முன்தினம் காலை, அதே பகுதியை சேர்ந்த, கணேசன், 56, என்பவரை அழைத்துக்கொண்டு, ‘டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸல்’ மொபட்டில் சென்றார். பின், வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மதியம், 12:00 மணிக்கு, வாழப்பாடி, பேளூர் பிரிவு சாலையில் சென்றபோது, கள்ளக்குறிச்சியிலிருந்து, சேலம் நோக்கிச்சென்ற, ‘ரமணி’ பஸ் மோதியது. அதில், தலைநசுங்கிய கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பழனிசாமி, சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரணையில், தும்பலைச் சேர்ந்த, பஸ் டிரைவர் செல்வமணி, 28, ஓட்டிவந்தது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® நிறைவாழ்வு இல்லத்தில் தம்பதி சேர்ப்பு

சேலம்: சேலம், ஐந்து ரோடு, அண்ணாபுரத்திலும், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியிலும், அண்ணாதுரை, அருள்மலர் ஆகியோர், நிறைவாழ்வு முதியோர் இல்லம் நடத்துகின்றனர். அவர்கள், 30க்கும் மேற்பட்ட முதியோர்களை பராமரிக்கின்றனர். இந்நிலையில், களரம்பட்டியைச் சேர்ந்த சண்முகம், 75, அவரது மனைவி சசிகலா, 66, ஆகியோர், பிள்ளைகள் கைவிட்ட நிலையில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகாவிடம், மனு அளித்தனர். அவர், நிறைவாழ்வு முதியோர் இல்லத்துக்கு, தம்பதியரை அனுப்பினார். அதன் நிர்வாகிகள் அண்ணாதுரை, அருள்மலர், அவர்களை, இல்லத்தில் சேர்த்துக்கொண்டனர். இதனால், மகிழ்ச்சியடைந்த தம்பதியர், கார்த்திகா, இல்ல நிர்வாகிகளுக்கு, கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ற நாடாக சிங்கப்பூர் உள்ளது.”
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?அமெரிக்க அதிபருக்கு தாலிபன்கள் எச்சரிக்கை.

?பல அமெரிக்கர்களின் உயிர்களை விலையாக கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு தாலிபன்கள் எச்சரிக்கை.
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® ஓய்வு காவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு

ஓமலூர்: சேலம் மாவட்ட, ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க நிர்வாகிகள் தேர்தல், நேற்று முன்தினம், ஓமலூரில் நடந்தது. அதில், தலைவராக மாதேஸ், செயலாளராக கிருஷ்ணன், பொருளாளராக லோகநாதன் தேர்வு செய்யப்பட்டனர். இதில், திரளான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® ‘ஆசிரியர் செம்மல்’ விருது: பேராசிரியருக்கு பாராட்டு

வாழப்பாடி: தலைவாசல் அருகே, வடகுமரையைச் சேர்ந்தவர் குருசந்தர், 51; தமிழ் துறையில், முதுகலை பட்டம் பெற்ற இவர், 2002ல், தமிழ் திரைப்படம் குறித்து ஆய்வு செய்து, சென்னை பல்கலையில், முனைவர் பட்டம் பெற்றார். 19 ஆண்டாக, சேலத்திலுள்ள, தனியார் கல்லூரியில், தமிழ் துறை தலைவராக பணிபுரிகிறார். கடந்த, 10 ஆண்டாக, அயோத்தியாப்பட்டணத்தில் வசிக்கும் அவர், ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். சில படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அவரது சேவையை பாராட்டி, சென்னை, தமிழ் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி மையம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழாவில், ‘ஆசிரியர் செம்மல்’ விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, அவரை, பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள், வாழப்பாடி கிளை உலக தமிழ் கழக நிர்வாகிகள் வாழ்த்தினர்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® ஆலோசனையின்றி திட்டப்பணி: பொதுப்பணித்துறை அடம்

மேட்டூர்: பொதுப்பணித்துறை பிரிவு அதிகாரிகள், ஆலோசனை கேட்காமல், கட்டுமானப்பணி மேற்கொள்வது, பிற துறை அலுலர்களுக்கு, தொல்லையை தருகிறது.

சட்டசபை தொகுதிகளில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு திட்டத்தில், கான்கீரிட் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால், ரேஷன் கடை, உயர்கோபுர மின்விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. அப்பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறைக்கு பரிந்துரைப்பார். அத்துறை சார்பில், ஒப்பந்தம் விடப்பட்டு, பணி நடக்கும். நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட துறைகளில், நகராட்சி, குடிநீர் வாரிய பணி மேற்கொள்ள, அத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், சேலம் கோட்ட பொதுப்பணித்துறை கட்டட(கட்டுமானம், பராமரிப்பு) பிரிவு அலுவலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், நகராட்சியில் மேற்கொள்ளும் பணிக்கு, அந்த நிர்வாக அனுமதி, ஆலோசனையை கேட்பதில்லை. சமீபத்தில், எம்.எல்.ஏ., செம்மலை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், மேட்டூர் நகராட்சியில், கான்கிரீட் சாலை, மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் நடந்தன. அதை மேற்கொள்ளும் முன், நகராட்சி அனுமதி, நிர்வாக ஆலோசனை கேட்டிருந்தால், பணியை சிறப்பாக செய்திருக்கலாம். ஆனால், அனுமதி பெறாமல் பணிபுரிவதால், பிரச்னை ஏற்படுவதாக, நகராட்சி அலுவலர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: மேட்டூர், காவிரி பாலம் அருகே, கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, அடிவாரத்தில் அமைத்திருந்த பாதாள சாக்கடை தொட்டியை மூடினர். தொட்டி எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்கவே, தற்போது சிரமமாக உள்ளது. மேலும், நகராட்சி நிர்வாக ஆலோசனையை கேட்காமல், மின்வாரிய பணிமனை முனையம் அருகே, மழைநீர் வடிகால் கட்டியுள்ளனர். சாலை எவ்வளவு அகலம் உள்ளது என்பதை அளவீடு செய்யாமலே, வடிகால் அமைத்துள்ளனர். இதேபோல், பல்வேறு பணிகளை, சம்பந்தபட்ட துறை அலுவலர்களின் ஆலோசனையை கேட்காமல் மேற்கொள்வதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, நகராட்சி நிர்வாகத்துக்கும், பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுப்பணித்துறை நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் ஆலோசனையை கேட்டபின் செய்வது அவசியம். அதற்கு பதிலாக, அலட்சியமாக, பிற துறைகளில் கட்டுமானப்பணி மேற்கொண்டால், இறுதியில் பாதிக்கப்படுவது மக்கள்தான். அதனால், இதுபோன்ற செயல்பாடுகளை, பொதுப்பணித்துறை தவிர்த்தால், மக்களின் அவதி தீரும்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® பாலத்தில் திக்… திக் பயணம்: கரணம் தப்பினால் மரணம்

சங்ககிரி: மக்களே அமைத்த சிறு பாலத்தில், தினமும் அச்சத்துடன் சென்றுவருகின்றனர். மேலும், கொஞ்சம் தடுமாறினாலும், கால்வாயில் விழுந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இதனால், அரசு, பெரிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்ககிரி, அரசிராமணி பேரூராட்சி, மேற்கு ஓலப்பாளையம், கப்பரையான்காடு, பீரங்கிதிட்டு, குட்டிகரடு பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, மேற்கு ஓலப்பாளையத்தில், மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் செல்லும் கிழக்குக்கரை கால்வாய் குறுக்கே, அப்பகுதி மக்களே, ஒரு லட்சம் ரூபாய் செலவில், 3 அடி அகலத்தில், இரும்பில், சிறு பாலம் அமைத்தனர். அதன்மூலம், கப்பரையான் காடு, பீரங்கிதிட்டு, குட்டிக்கரடு மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவரும், தேவூர், குள்ளம்பட்டி, இடைப்பாடி, குமாரபாளையம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், பாலத்தில் கைப்பிடி வசதி இல்லாததால், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மின்விளக்கும் இல்லாததால், இரவில், பாலத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

இதுகுறித்து, மேற்கு ஓலப்பாளையம், அ.தி.மு.க., நகர அவைத்தலைவர் மணி கூறியதாவது: மேற்கு ஓலப்பாளையம் கிழக்கு கரை கால்வாய் குறுக்கே, 27 ஆண்டுக்கு முன், பனை மரத்தால் பாலம் அமைத்து பயன்படுத்தினோம். அது அடிக்கடி சேதமடைந்ததால், மக்களிடம் நிதி திரட்டி, இரும்பில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த சிறு பாலமும் இல்லாவிட்டால், 3 கி.மீ., சுற்றி தான், தேவூருக்கு செல்ல வேண்டும். கான்கிரீட் பாலம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை(மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் பிரிவு) உதவி பொறியாளர் உமா மகேஸ்வரி கூறுகையில், ”மேற்கு ஓலப்பாளையம் மக்கள், பாலம் கட்டக்கோரி மனு அளித்தனர். அதன்மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,” என்றார்.

®®ஊடகதளம்
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® விசாரணை கைதி நெஞ்சு வலியால் சாவு

சேலம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த, சுப்ரமணி மகன் ராஜசேகர், 30; இவர் மீது, நான்கு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருட்டு வழக்கில், கடந்த, 31ல், சேலம் மத்திய சிறையில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். நேற்று மதியம், 1:30 மணிக்கு, மதிய உணவு உட்கொண்ட நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 3:45 மணிக்கு உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீசார், அவரது மனைவி பெண்ணரசிக்கு, தகவல் கொடுத்து விசாரிக்கின்றனர்.

winmeennews.com ஊடகதளம்*
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® இதயத்தில் அடைப்பு; துணை ஜெயிலர் ‘அட்மிட்’

சேலம்: சேலம், மத்திய சிறை துணை ஜெயிலர் கணபதி, 57; அஸ்தம்பட்டி சிறை வளாக குடியிருப்பில் வசிக்கிறார். நேற்று காலை, 10:30 மணிக்கு, சிறை அலுவலக அறையில் சுருண்டு விழுந்தார். சிறை மருத்துவர்கள், சிகிச்சை அளித்தபோது, நீரிழிவு, ரத்த கொதிப்பு அளவு, பலமடங்கு எகிறியது தெரியவந்தது. பின், சேலம், அரசு மருத்துவமனை, அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதயத்தில் ஏற்பட்ட அடைப்பால், அவர், மயக்கமடைந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Winmeennews.comஊடகதளம்*
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® சீரியல்களுக்கு தணிக்கை சான்று: மூத்த நடிகை வலியுறுத்தல்

ஆத்தூர்: ”டிவி சீரியல்களுக்கு, தணிக்கை சான்று வழங்க வேண்டும்,” என, திரைப்பட நடிகை நளினி தெரிவித்தார்.

இதுகுறித்து, சேலம் மாவட்டம், ஆத்தூரில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் கலைமாமணி விருது, 2011 முதல் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, கடந்த ஆக., 13ல், எனக்கு உள்பட, 201 பேருக்கு வழங்கினார். சினிமா கலைஞர்களுக்கு ஓய்வூதியம், கலைமாமணி விருதில், மூன்றிலிருந்து, ஐந்து சவரனாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமா, அதிக கதை களத்துடன் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், வன்முறை காட்சிகளை தவிர்த்து, சமுதாய சீர்திருத்தம், விழிப்புணர்வு நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திரைப்படங்களை போன்று, ‘டிவி’ சீரியல்களுக்கும், தணிக்கை சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொழுதுபோக்காக, ‘டிவி’ சீரியல் உள்ளதால், அதற்கு கட்டுப்பாடு வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ரஜினிகாந்த், தனி கட்சி தொடங்கினாலும், பா.ஜ.,வின் தலைவராக வந்தாலும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

winmeennews.com ஊடகதளம்*
[9/9, 6:12 PM] விண்மீண்நியூஸ்2: ®® படிக்கட்டில் தொங்கும் அவலம்; கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்

தலைவாசல்: தலைவாசலில், அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகின்றன. அங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். குறிப்பாக, தலைவாசல், புத்தூர், ஊனத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே, அதிகளவில் உள்ளனர். ஊனத்தூர், வரகூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, பள்ளி செல்லும் மாணவர்கள், கல்லூரிக்கு செல்வோர், காலையில், ஊனத்தூரிலிருந்து தலைவாசல் வழியாக, ஆத்தூர் செல்லும் பஸ்சையே நம்பியுள்ளனர். மாற்று பஸ்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், படியில் தொங்கியபடியே பயணிக்கின்றனர். பையை தோளில் மாட்டிக்கொண்டு, படிகளில் தொங்கிச்செல்வதால், தேசிய நெடுஞ்சாலையில், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், மாணவர்கள் நலன் கருதி, காலையில், ஊனத்தூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

?winmeennews.com ஊடகதளம்?

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button