💥விரிவான செய்திகள் இந்தியா – தமிழ்நாடு – உலகம்💥


💥💥💥💐விண்மீண்நியூஸ்💐💥💥💥 💪🏻
திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்ததைப் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பேசும்போது கோடிட்டு காட்ட காங்கிரஸ்காரர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்*
நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள் அந்தத் தொகுதியால் காங்கிரஸ் கட்சி மனக்கவலையில் உள்ளது. தங்களுடைய எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தங்களால் போட்டியிட முடியுமா என்ற விசனத்தில் அக்கட்சி உள்ளது. நாங்குநேரியை கூட்டணி கட்சியான திமுக விட்டுதருமா என்ற எதிர்பார்ப்பிலும் அக்கட்சி இருக்கிறது. அண்மையில் நாங்குநேரியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ‘தனித்து போட்டியிட முடியாதா..?’ என்று ஏக்கத்தோடு கேள்வி எழுப்பினார். ஆனால், திமுகவின் தயவுஇன்றி வெற்றி சாத்தியப்படாது என்பதால், வெளிப்படையாக எதைப் பற்றியும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். தனித்து போட்டி என்று தீர்மானம் நிறைவேற்றிய நெல்லை கிழக்கு மாவட்ட தலைவருக்கு கட்சி தலைமை அவசரமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் நிலையில்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது.என்றாலும் எப்படியும் மு.க. ஸ்டாலினின் மனம் மாறி, நாங்குநேரியைக் கொடுப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இருக்கிறார். இந்நிலையில் முன்பு கருணாநிதி காங்கிரஸ் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் அத்தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்த விஷயங்களைப் பற்றி மு.க. ஸ்டாலினுடன் பேச முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.2007-ல் அதிமுக எம்.எல்.ஏ. மறைவால் மதுரை மத்திய மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 100 தொகுதிகளில் பெற முடியாத நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மதுரை மேற்கில் போட்டியிட்டிருக்கலாம். ஆனால், அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிருந்ததால், அத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே விட்டுக்கொடுத்தார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. இதேபோல 2009-ல் நடைபெற்ற தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை விட்டுக்கொடுத்தது திமுக.குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. கண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். ‘கருணாநிதியின் காரோட்டி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரை மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வைக்காமல், அது திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால், அக்கட்சிக்கே கருணாநிதி விட்டுக்கொடுத்தார். தற்போது இந்த பழைய நடைமுறையை மு.க. ஸ்டாலினுக்கு ஞாபகப்படுத்த காங்கிரஸ் தரப்பில் தயாராகிவருவதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 2006 – 2011-ம் ஆண்டுகாலத்தில் காங்கிரஸ் தயவில்தான் திமுக இங்கே முழுமையாக ஆட்சியில் இருந்தது. மத்தியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியும் இருந்தது. இதனால், திமுக – காங்கிரஸ் தலைமை இடையே நல்ல உறவும் புரிதலும் இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை என்பதால், பெரிய அளவில் ஒட்டுதலும் இல்லை; புரிதலும் இல்லை. எனவே காங்கிரஸின் இந்த முயற்சி பலனளிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்
[9/9, 1:46 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻தெலுங்கானா கலாச்சாரம் தெரிந்திருப்பதால் பணியாற்றுவதில் சிரமம் இல்லை- தமிழிசை பேட்டி
தெலுங்கானா மாநில கலாச்சாரத்தை புரிந்து வைத்திருப்பதால் எந்தவித சிரமமும் எனக்கு ஏற்படாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
[9/9, 1:46 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻தாலிபான்களுடனான அனைத்துவித அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தாலிபான்களுடன் அமெரிக்கா தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் தாலிபான்கள் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் அரசுப் படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் தாலிபான்களால் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 11பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தாலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் தற்போது வாபஸ் பெறப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு அந்நாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஆபத்தாக முடியும் என தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்
[9/9, 1:46 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻பாகிஸ்தான் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடனம் இடம்பெற்றது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பக்குவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பாகிஸ்தான் நடத்தியது. கடந்த 6 தினங்களாக நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு நாளில், முதலீட்டாளர்களை கவருவதற்காக பெல்லி நடனம் இடம் பெற்றது. புதிய, புதிய மாடல்களை கொண்டு, இடைவிடாது நடந்த இந்த பெல்லி நடனத்தை பாகிஸ்தானின் ஊடகங்களும் ஒளிபரப்பியது. பாகிஸ்தான் அரசு நடத்திய, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இது போன்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில் பாகிஸ்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடனம் சர்ச்சையான நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மாநாட்டில் பங்கு பெற்ற முதலீட்டாளர்கள் பெல்லி நடனத்தை வீடியோவில் பதிவு செய்ததும் கேலிக்கு உள்ளாகியது. முதலீட்டாளர்களை கவரவே பாகிஸ்தான் அரசு பெல்லி நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அரசே இது போன்ற நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதை அடுத்து அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்
நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு பல விதிகளை மீறியதற்கு அவருக்கு மொத்தம் ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻பெங்களூருவில் ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை
பெங்களூருவில் ஐ.எப்.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻வங்கி மோசடி குற்றவாளிகள் 147 பேருக்கு எதிராக நடவடிக்கை – பாரத ஸ்டேட் வங்கி தகவல்
வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க வங்கி மோசடி குற்றவாளிகள் 147 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாரத ஸ்டேட் வங்கி விமான நிலையங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது: கிரண்பேடி
புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பரப்புரை தவறானது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻கனடாவை தாக்கியது ‘டொரியன்’ புயல் – 4½ லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தின் ஹெலிபேக்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு ‘டொரியன்’ புயல் கரையைக் கடந்தது
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 💯% விழுப்புரம் : திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையில் கருணாகரன் என்பவர் வீட்டில் ரூபாய் 4 லட்சம் கொள்ளை
════ 💯% N҉ e҉ w҉ s҉ ════
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் – பிரதமர் மோடி பேச்சு
பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻ஈராக்: அமெரிக்கா தலைமையிலான விமானப்படை தாக்குதலில் 8 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பலி
ஈராக் நாட்டின் நினேவே மாகாணத்தில் இன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டு விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🆎 நேரலை செய்திகள்
🆎நெல்லை மாவட்ட அணைகள் நிலவரம்.
🆎பாபநாசம்
நீர்மட்டம்- 143 அடி,நீர் இருப்பு- 120.05 அடி
🆎சேர்வலாறு
நீர்மட்டம்- 156 அடி,நீர் இருப்பு- 129.20அடி
🆎மணிமுத்தாறு
நீர்மட்டம்- 118 அடி,நீர் இருப்பு- 51.30 அடி
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 💯% திருவாரூர் : திருவாசல் குளத்தில் தூர்வாரி பணிகளை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
💯% ஜேசிபி இயந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் இயக்கி தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார்
💯% தூர்வாரும் பணியில் எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன் , ஆடலரசன் , டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பு
💯% திமுக இளைஞரணியால் முடிந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம்
உதயநிதி ஸ்டாலின்
════ 💯% N҉ e҉ w҉ s҉ ════
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை காப்பாற்றுங்கள் – டிரம்புக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை
ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻ராமநாதபுரத்தில் நாளை முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
[9/9, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: 🏛💪🏻புற்றுநோய் சிகிச்சைக்கு பசு கோமியம் – மத்திய மந்திரி தகவல்
புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மந்திரி குறிப்பிட்டுள்ளார்.