இந்தியா

தினமும் பள்ளிக்கூடத்திற்கு வந்து மாணவர்களுடன் பழகி வந்த ஆந்திர குரங்கு உயிரிழப்பு , மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது ?????

advertisement by google

???

advertisement by google

ஆந்திரத்தில் பள்ளிக்கூடத்திற்கு தவறாமல் வந்து மாணவர்களோடு மாணவராக பழகிய குரங்கு லட்சுமி உயிரிழந்தது. இதனால் மாணவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

advertisement by google

ஆந்திர மாநிலம் வெங்காலம்பள்ளி பகுதியில் உள்ளது அரசு பள்ளி. இ்நத பள்ளிக்கு லங்கூர் வகை 2 வயது குரங்கு ஒன்று தினமும் வந்து மாணவர்களுடன் பாடத்தை கவனிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலானது. மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததால் பள்ளி நிர்வாகமும் அந்த குரங்கை துரத்தாமல் பள்ளி வகுப்பறைக்கு அனுமதித்தனர். தினந்தோறும் பள்ளிக்கு வருவது, மாணவர்கள் பாடம் எழுதுவதை உன்னிப்பாக கவனிப்பது உள்ளிட்ட காரணங்களால் ஈர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அந்த பெண் குரங்கிற்கு லட்சுமி என பெயரிட்டனர்.உங்கள் பயணத்தின் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்.. இஸ்ரோவுக்கு நாசா பாராட்டுலத்தீஃப்இந்த நிலையில் லட்சுமி நேற்று மதிய உணவு இடைவேளைக்காக வெளியே சென்ற போது தெருநாய்க்களால் தாக்கப்பட்டு இறந்தது. இதுகுறித்து பள்ளி முதல்வர் சையது அப்துல் லத்தீஃப் கான் கூறுகையில் லட்சுமி தினமும் மாணவர்களுடன் மதிய உணவை அருந்தும்.இடைவேளைலட்சுமிக்காக மாணவர்கள் வாழைப்பழம், பழங்கள் உள்ளிட்டவைகளை உணவாக கொடுப்பர். எனினும் லட்சுமி உணவு இடைவேளையின்போது வெளியே சென்றுவிட்டு பள்ளி தொடங்கும்போது மீண்டும் வந்துவிடுவது வழக்கம்.காப்பாற்ற முயற்சிஅதுபோல் நேற்றும் மதிய உணவு இடைவேளைக்காக லட்சுமி வெளியே சென்றது. அப்போது அதன் அழுகுரல் கேட்டது. என்னவென பார்த்தபோது அந்த குரங்கை சில தெருநாய்கள் கடித்து குதறியது. லட்சுமியை காப்பாற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஓடினோம். ஆனால் அதற்கு லட்சுமி உயிரிழந்துவிட்டது என்றார்.2 பலியாகினஅருகில் உள்ள காடுகளிலிருந்து லட்சுமியுடன் இரண்டு லங்கூர் குரங்குகள் இந்த பள்ளி வளாகத்திற்கு கடந்த ஜூலை மாதம் வந்தன. அப்போது மற்ற இரண்டு குரங்குகள் சிமென்ட் கலக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டன. லட்சுமி மட்டும் இருந்தது.காயப்படுத்தாத லட்சுமிஅது 100 சதவீதம் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தது. அதன் வருகை பதிவேடு சதவீதமும் 100 ஆகும். இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் வசிக்கும். இது வரை லட்சுமி யாரையும் காயப்படுத்தியது இல்லை. அதை கிராமத்தை சேர்ந்த ஒருவர் கொண்டு சென்று வளர்ப்பதற்காக அழைத்து சென்றார்.சோகம்ஆனால் அவருடன் இருக்க விருப்பம் இல்லாமல் வியாழக்கிழமை மீண்டும் பள்ளிக்கே வந்துவிட்டது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் பள்ளிக்கு வந்த லட்சுமி நேற்று பலியாகிவிட்டது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button