பயனுள்ள தகவல்

காமராஜர்

advertisement by google

நேற்று படித்த ஒரு விஷயம் “காமராஜரை “என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய் வைத்தது.

advertisement by google

நம்ம “பரமக்குடி சீனிவாசன்” அதாங்க நம்ம கமல்ஹாசனோட அப்பாவும், பெருந் தலைவர் காமராஜரும் நல்ல நண்பர்கள். ஒரு முறை அவர் முதலமைச்சரா இருந்தப்போ தலைவரைப் பார்க்க நம்ம சீனிவாசன் போயிருக்காரு, என்ன விஷயம்? னு பெருந்தலைவர் கேட்க, என் பையனுக்கு (சாருஹாசனுக்கு)மாநிலக் கல்லூரில BSC சீட் வேணும்னு தயங்கிக் கொண்டே சொல்ல, உன் பையனுக்கு சீட் வாங்கித் தரவா நான் இந்தப் பதவிக்கு வந்தேன்னு சொல்ல. “சீனிவாசன்” அவர்களுக்கு சங்கடமாப் போச்சாம்.

advertisement by google

கொஞ்சம் வருத்தத்தோட 15 சீட் தானாம், அதான் கிடைக்குமான்னு தெரியலன்னு போக முற்பட்டவரை நிறுத்தி, என்ன சொன்ன? வெறும் 15 சீட் தானா? ஏன்? இவ்வளவு குறைவான இடங்கள்?அந்த பிரின்சிபாலுக்கு போனைப் போடுன்னாராம்.

advertisement by google

ஏன்பா வெறும் 15 சீட் காலேஜ்லன்னு கேட்க, யுனிவர்சிட்டி அவ்வளவு தான் அனுமதிக்குதுங்க நான் என்ன பண்ண முடியும்னு பிரின்ஸி சொல் , சரி யுனிவர்சிட்டிக்கு போன போடுன்னு சொல்லி அங்க கேட்க, அங்க லேப் வசதியில்லை, 15 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது, என்னால் எதுவும் செய்ய முடியாது எனக் கூற உடனே கல்வித்துறை மந்திரிக்குப் போன் பறக்கிறது. ஏன்? வெறும் 15 சீட், மற்ற குழந்தைகளும் படிக்க வேண்டாமா? நாடு எப்படி முன்னேறும் ? படிச்சாத்தானே முன்னேறும், இதைக் கூட்ட முடியாதா? எனக் கேட்க, கல்வி அமைச்சரும் “ஐயா அங்கு 15 மாணவர்களுக்கு மட்டுமே லேப் வசதி உண்டு, மேற்கொண்டு சேர்த்தால் வசதிப்படாதே எனக் கூற, “காமராஜர் ” கூறினாராம் உங்க வீட்டுக்கு 30 பேர் விருந்தாளி வருகிறார்கள்? என்ன செய்வ ? 15 பேருக்கு சமைக்க மட்டுமே பாத்திரம் இருக்குன்னு வை? என்ன பண்ணுவ?முதலில் 15 பேருக்கு சமைச்சு வைச்சுட்டு, கழுவி அதே பாத்திரத்துல இன்னொரு முறை சமையல் செய்வ தானே.

advertisement by google

அது போல இரண்டு ஷிப்ட் போடு, காலை, மாலை என, இன்னும் 15 பட்டதாரிகள் உருவாகட்டும்னு சொன்னாராம். கல்வி மந்திரியும் இந்த யோசனை எங்களுக்கு வரலீங்க ஐயா,இது வரை அமுல்படுத்துகிறோம்னு சொன்னாராம். அப்படி வந்தது தான் Evening காலேஜ். கல்வியில் ஆதவனாச்சே இவர்.

advertisement by google

பிறகு அவர் சீனிவாசனைப் பார்த்து சொன்னாராம், சீட் இப்போ 30 ஆயாச்சு, உன் மகனுக்குத் தகுதி இருந்தால் கிடைக்கும்னு சொல்லி விட்டு சென்று விட்டாராம்,அதனால தான் அவர் பெருந் தலைவர்னு அழைக்கப்பட்டார் போல.
என்ன ஒரு மனிதரா வாழ்ந்திருக்கிறார்.✍??

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button