கிரைம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

மறுக்க மறைக்க முடியாத எதார்த்தம்?சுயபரிசோதனை என்ன?

advertisement by google

மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தைப் பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்…

advertisement by google

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிகச் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது…

advertisement by google

இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்…

advertisement by google

ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்..

advertisement by google

இன்னொரு பக்கம் வேலைக்குச் சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்…

advertisement by google

எந்தப் படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்..

advertisement by google

எந்தத் தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்…

advertisement by google

பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன…

எங்கு பார்த்தாலும் “எந்த பிசினசும் சரியில்லைங்க” என்ற பேச்சுகள்…

இதற்குப் பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை..

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்…

  1. மது & போதை

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலைமறை காய் மறையாக இருந்த மதுப்பழக்கம்…

இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகி விட்டது…

தினமும் மாலை ஆகி விட்டால் பாட்டிலைத் தொடாமல் இருக்க முடியாது…

என்கின்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும்…

அவர்களுக்குப் போட்டியாக….
பெண்களும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்

உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில்…

இன்று குடிகாரர்கள் நிறைந்து ,
உற்பத்தித் திறன் (productivity) மிகவும் குறைந்து விட்டது…

குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்டப் பணி நேரத்திலோ…
செய்ய முடிவதில்லை..

குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள்,
கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியைக் கூட செய்ய முடிவதில்லை…

அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள் அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்…

வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று…

இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும்,…

இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூக விரோதிகளாகவும் உருவாகும்…

மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறது…

  1. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால்….
    பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்தனர்.

சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்குங் சென்றனர்..

சிலர் கவலையில் குடி நோயாளிகளாகி விட்டனர்…

மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்கப் பயந்து பணிக்குச் செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.

  1. நூறு நாள் வேலை..

இந்தத் திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை…
ஆனால் ….
தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை..

இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால்…

காலை 10 மணிக்குப் போய் விட்டு 2 மணிக்கு வந்து விடலாம்,
வீட்டுக்குத் தேவையான விறகுகளை வெட்டிக் கொள்ளலாம்..

வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்து விடும் என்ற நிலையால்….

சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது…

  1. இலவசங்கள்…

அரசு தரும் இலவசப் பொருட்களும்,
ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும்…
மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கி விட்டனர்..

  1. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்..

அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன் மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை…

இத்தகையக் காரணங்களால்…..
தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கிப் பயணிக்கிறது…

சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்துப் பாருங்கள்..

10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பளப் பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்ததாக சொல்லுவார்கள்..

தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர்,
வேறு வழியின்றி தங்களுக்குத் தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர்…

ஓட்டல் முதல் கட்டுமானத் துறை வரை இதுதான் நடக்கிறது…

தமிழ் சமையல்காரர் ஒரு நாளைக்கு ₹850-1000 சம்பளத்திற்கு ,
(பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட…

ஒரு வடநாட்டவர் 2 மணி நேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்குச் செய்கிறார்..

தங்க வீடு, சாப்பாடு கொடுத்து விட்டால் போதுமானது..
வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்…

இதுதான் கொத்தனார், ஆசாரி வேலைகளுக்கும்…

நம் ஆட்கள் கேலி செய்வதைப் போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை…

சொல்லப் போனால் இங்கு கோவை திருப்பூரில்
நான் பார்த்த வரை ஆயிரக்கணக்கான . பானிபூரி வண்டிகள் உள்ளன…

அவற்றில் 10 % கூட வட இந்தியர்களுடையதல்ல.90% க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்…

கடைசியாக..

நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்களின் மனநிலையில்….
ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது…

வேலையே செய்யக் கூடாது,

சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும்,

சும்மாவே பணம் கிடைக்க வேண்டும்,

சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும்,

தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்…

இவற்றைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம்….

கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ,

இன்னும்…

எல்லோரும்…
இது குறித்து சிந்தித்து…!!!!

இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற…

வழி தேடினால் மட்டுமே தமிழகம் தப்பிப் பிழைக்கும்…

மாற்றங்கள் எங்கிருந்து.. ?????
அனைத்தும்… நம்மிடம்…….

advertisement by google

Related Articles

Back to top button