கல்விகிரைம்பயனுள்ள தகவல்

இளைஞர்கள் தாய்மார்களின் இனிய வாழ்வுக்கு 30கட்டளைகள்

advertisement by google

இளைஞர்கள், தாய்மார்களின் இனிய வாழ்வுக்கு 30 கட்டளைகள்!

advertisement by google

அனைவரையும் நேசியுங்கள். உலகில் யாரையும் வெறுக்க வேண்டாம். யாவரும் இயற்கையின் பிள்ளைகள்.

advertisement by google

எவர் என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேளுங்கள். முழுமையாய்க் கேட்ட பின் பதில் கூறுங்கள். இடையில் குறுக்கிடாதீர்கள்.

advertisement by google

சிறியவர்களானாலும் அனைவரையும் வாங்க… என்று, மரியாதை கொடுத்துப் பேசுங்கள்.

advertisement by google

ஒருவருக்கொருவர் உண்மையாய் இருங்கள்.

advertisement by google

பெருமை கொள்ள வேண்டாம். பொறுமையாய் இருங்கள்.

advertisement by google

சிறு தவறு செய்தாலும் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவியுங்கள்.

advertisement by google

வித்தியாசங்கள், ஏற்றத் தாழ்வுகள், எங்கும் இருக்கத் தான் செய்யும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

யாவரிடமும் அன்பைப் பரிமாறி வாழ்த்துக் கூறுங்கள்.

காலையில் முதல் வேலையாக இயற்கைக்கு நன்றி கூறுங்கள்.

யாருக்காவது தோல்வி ஏற்பட்டால் தைரியம் சொல்லுங்கள்.

நல்ல நண்பர்களைப் போற்றுங்கள். தீய நட்பை விட்டொழியுங்கள்.

மற்றவர் கருத்து, உணர்வு, நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள்.

எப்போதும் புன்சிரிப்புடன், பாசிட்டிவ்வாகப் பேசி அனைவரையும் கவருங்கள்.

எதிலும் விவாதம் வேண்டாம். சண்டை வேண்டாம், உரையாடுங்கள்.

இனிய நோக்கம், இனிய சொற்கள், அனைத்துச் சிக்கலையும் போக்கும்.

உறவு மீண்டும் வராது. இந்தப் பிறவியில் கடவுள் தந்த உறவுகளைப் போற்றுங்கள்.

ஒருவர் முடியாதவர் விரும்பும் போது, முடிந்தவர் நிறைவேற்றி மகிழலாமே!

கோபம் கூடவே கூடாது! மனிதனின் எதிரி கோபமே.

காலை மாலை இருவேளை குளியுங்கள். உடலை ஆரோக்கியமாக வையுங்கள். தீய பழக்கங்கள் கூடவே கூடாது.

குடும்பம் தான் உங்கள் கோவில். அதிக நேரம் குடும்பத்தோடு இருங்கள், பேசுங்கள், விவாதித்து முடிவெடுங்கள்.

அனைத்தையும் நம்புங்கள். சீர் தூக்கிப் பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

நேரம் பொன் போன்றது. வினாடி கூட வீணாக்காதீர்கள்.

தேவையற்ற ஆசைகள், அதிகம் சேர்க்கும் பேராசை ஆகியவை கூடாது.

எந்த நல்ல விசயத்தையும் பாராட்டுங்கள்.

சிறுகச் சிறுகச் சேமியுங்கள். தேவையற்ற ஒரு குண்டூசி கூட வாங்காதீர்கள்.

கடன் வாங்கும் முன் யோசியுங்கள்.

மற்றவர்களை ஆசீர்வதியுங்கள், மற்றவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்.

வீட்டில் குழந்தைகளிடம் ஊழியர்களிடம் கண்டிப்பாக இருங்கள்.

நேரம் தவறாதீர்கள், சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் இருங்கள்.

இப்பிறவி ஒரே முறை தான். மண்ணிலிருந்து வந்தோம். மண்ணில் வந்ததைச் சாப்பிடுகிறோம். மண்ணிற்கே திரும்புகிறோம். எனவே மகிழ்ச்சியாய் இந்த வாழ்வை முடிப்போம். பிறருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குவோம்.

advertisement by google

Related Articles

Back to top button