கிரைம்வரலாறு

இராவணன் அரக்கனா?பிணத்தை உண்ணும் அகோரியா?

advertisement by google

யார் இந்த இராவணன்…??
அரக்கனா…??
பிணத்தை உண்ணும் அகோரியா…??
அயோக்கியனா..??

advertisement by google

இல்லை! இல்லை! இவற்றில் எதுவுமே இல்லை!

advertisement by google

பிறகு இராவணன் யார்….???

advertisement by google

கலை பத்தில் தலைசிறந்த கலைஞன்.

advertisement by google

யாழிசை வித்தகன்.

advertisement by google

பெண்களை கண்ணெனப் போற்றும் பேராண்மை வாய்ந்தவன்.

advertisement by google

அப்படியென்றால் புராணத்தில் சொல்லப்பட்டவை….???

advertisement by google

கேள்வி எழும் எனில் அதற்கான விடை வெறும் பொய் கதை என்பதே.

புராணங்கள் இதிகாசங்கள் யாவும் *பண்டைத் தமிழர்களை அரக்கர்களாகவும் கோர வடிவம் கொண்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன.

இந்த புனைவுக்கதைகள் பெரும்பாலான புராணங்கள் தமிழர்களை
அசுரர் என்றே அடையாளப்படுத்துகிறது.

“சுரர் என்றால் மது அருந்துபவன். அசுரன் என்றால் மது அருந்தாதவன்”

இதை தவறாக எடுத்துக்கொண்ட நமது சமூகம் அசுரன் என்றால் அரக்கன் என்ற தவறான புரிதலுக்குள் விழுந்து விட்டது.

ஒருவேளை உண்மையில் இராவணன் கொடியவனாக இருந்திருந்தால் சீதையை கவர்ந்த அந்நொடியே அவள் வன்புணர்ச்சிக்கு ஆளாகி இருப்பால் இராமன் வந்திருக்க மாட்டான் இராமயணம் பிறந்திருக்காது.

“சீதை சிதையில் இறங்கியது கூட இராவணன் கற்பை நிரூபிக்கத்தான்”.

இராமாயணமே பதிவு செய்கிறது இராவணன் ஆட்சியில் இலங்கை செல்வ செழிப்போடு இருந்ததென்று.

கட்டுக்கோப்பான ஆட்சி வழங்கியவர் இராவணன்.

வீரம் செறிந்தவன், மிகச்சிறந்த சிவபக்தன், எழுத்தாளன், மருத்துவன், மாண்புமிக்க போராளி, கலைஞன் இன்னும் இன்னும்….

ஆனால் இன்று, தன் இனத்தான் இறந்த நாளையே கொலுவைத்து கொண்டாடுகிற பார்ப்பனிய அடிமைத்தனத்தில் ஊறியவர்களாய் மாறி நிற்கிறோம்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் எரியப்போவது வெறும் இராவணன் பொம்மையல்ல,

நமது ஆண்மையும், வீரமும், இனமானமும் தான்.

இன்றளவும் ஒவ்வொரு முறையும் எரியூட்டப்படுகிறார் நமது பாட்டன் இராவணன்.

  • சூழ்ச்சியால் எங்கள் தமிழ் பாட்டன் இராவணன் அரக்கனான்.*

வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் வாழாது. படித்தறிவோம் தமிழர் வரலாற்றை.

*போற்றுவோம் நமது மூதாதை இராவணன் பெரும்புகழை.

advertisement by google

Related Articles

Back to top button