உலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கண்டாங்கி சேலைக்கு கிடைத்த பெருமை

advertisement by google

சிறப்பு வாய்ந்த செட்டிநாடு காட்டன் சேலைகளுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

advertisement by google

கண்டாங்கிப் புடவைக்குக் கிடைத்த பெருமை!

advertisement by google

இந்தியாவிலேயே பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படுவது செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை மட்டுமே. சிறியதும், பெரியதுமாக பட்டையான கோடுகள் அல்லது கட்டங்கள் நிறைந்த டிசைனில் இருப்பது இதன் சிறப்பு.

advertisement by google

இந்த சேலைகளில் டபுள் சைடு பார்டர் இருக்கும். மற்ற சேலைகளில் இல்லாதபடி 48 இன்ச் அகலம், 5.5 மீட்டர் நீளம் இருக்கும்.

advertisement by google

காலமாற்றங்களுக்கு ஏற்றபடி சமீப நாட்களில் சிங்கிள் சைடு பார்டர் சேலைகளையும் தயாரிக்கின்றனர்.

advertisement by google

செட்டி நாட்டு காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு 60 க்கு 60 பருத்தி நூலையே பயன்படுத்துகின்றனர். அரக்கு, சிவப்பு, பச்சை, அடர்நீலம் இவற்றோடு கறுப்பு மற்றும் வெள்ளை வண்ண நூல்களைப் பயன்படுத்துகின்றனர்.

advertisement by google

இதனால் டபுள் ஷேடு கிடைக்கிறது. புடவையும் பளிச்சென்று காண்போரைக் கவர்ந்திழுக்கும். சாயம் போய் நிறத்தையும் இழக்காது.

advertisement by google

இந்த சேலைகளை 200 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடி பகுயில் தேவாங்கர் இனத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி மூலம் நெசவு செய்கின்றனர்.

நகரத்தார் சமூகத்தினருக்காகத் தயாரிக்கப்படும் இந்த சேலைகள், தற்போது உலகெங்கும் பிரபலமாக உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த செட்டிநாடு காட்டன் சேலைகளுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டு, செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களாகும்.

advertisement by google

Related Articles

Back to top button