இந்தியா

கூலி தொழிலாளியாக மாறிய ராகுல்: டில்லி ரயில் நிலையத்தில் பெட்டிகளை தூக்கி சென்று பரபரப்பு

advertisement by google

தில்லி: தில்லி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பயணிகளின் உடைமைகளை தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

advertisement by google

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

advertisement by google

இதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிக் கொண்டே லாரியில் பயணம், திடீரென்று மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடல், கடலுக்குள் மீனவர்களுடன் சென்று மீன்பிடிப்பது, விவசாயிகளுடன் நாற்று நடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.

advertisement by google

இதுபோன்று நாட்டின் பல்வேறு கூலித் தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களின் வேலைகளை செய்து கொண்டே அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்.

advertisement by google

இந்த நிலையில், ராகுல் காந்தியை காண வேண்டும் என்று தில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அண்மையில் கோரிக்கை வைத்திருந்தனர்.

advertisement by google

இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை திடீரென்று ஆனந்த் விஹார் ரயில் நிலையம் சென்ற ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

advertisement by google

அப்போது, அவர்கள் அணியும் சிவப்பு நிற சட்டை அணிந்து பயணி ஒருவரின் சூட்கேஸை ராகுல் காந்தி சுமந்து சென்றார்.

advertisement by google

தொடர்ந்து, சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து ராகுல் காந்தியுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

advertisement by google

Related Articles

Back to top button