28.6 C
Kovilpatti
Thursday, September 21, 2023

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர்,சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியுள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி, தன்னை சீமான் மதுரை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், பலமுறை கருத்தரித்து, அதை சீமான் கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி புகாா் அளித்தாா். அதன்பேரில், சீமானுக்கு போலீஸாா் இரண்டு முறை அழைப்பாணை அனுப்பினா்.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

அப்போது பேசிய விஜயலட்சுமி, “சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூரு செல்லவுள்ளேன். காவல் துறையில் கொடுத்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினா். சீமானுடன் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வழக்கில் தொடா்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை” என்றாா்.

இந்த நிலையில், போலீஸின் அழைப்பாணையை ஏற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக சீமான் திங்கள்கிழமை காலை ஆஜரானார். அவரது மனைவி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியுள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இணையத்தில் பகிர

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles