27.4 C
Kovilpatti
Thursday, September 21, 2023

சீமான் வீட்டிற்கு நேரிடையாக 3வது முறையாக சம்மன் வழங்க சென்ற போலீசார், வாங்க மறுத்த சீமான் தரப்பு? நாளை ஆஜராக முடியாது என சீமான் தரப்பு தகவல்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் அடிப்படையில், சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி ஏற்கனவே சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் நேரில் ஆஜராகவில்லை.இந்த நிலையில் இன்று காலை வளசரவாக்கம் போலீசார், பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்று சம்மன் வழங்க முடிவு செய்தனர். நாளை நேரில் ஆஜராகுவதற்கான சம்மனை வழங்க சென்றபோது, சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்துவிட்டது.சீமான் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்த கொள்ள இருப்பதால் நேரில் ஆஜராக முடியும், அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து சம்மனை பெற்றுக்கொண்டு மற்றொரு தேதியில் நேரில் ஆஜராகுவார் எனவும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேவேளையில், விஜயலட்சுமி மீது மானநஷ்டஈடு வழக்கு தொடர இருப்பதாகவும், 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதால், வழக்கை ரத்து செய்யக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் சீமான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இணையத்தில் பகிர

Related Articles

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles