கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு!✍️முழுவிவரம்🌎விண்மீன் நியூஸ்🌍


கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் ஜூலை 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
காமராஜர் பயன்படுத்திய புதுப்பிக்கப்பட்ட காரை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டும், செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காமராஜர் முதல்வராக இருந்த பொழுது பயன்படுத்திய 1952. செவர்லேட் ஸ்டைல்லைன் டீலக்ஸ் என்ற மாடல் கார், கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரியில் புதுப்பிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த கார் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கர்மவீரர் காமராஜர், தமிழக முதல்வராக இருந்தபோது அவர் பயன்படுத்திய இந்த புதுப்பிக்கப்பட்ட காரை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டும், செல்பி எடுத்தும் செல்கின்றனர்.