என் உயிர் தமிழினமே
திருக்குறள் ;
12 – 7 – 2023 ; புதன் கிழமை ;
அதிகாரம் ; 7 ; மக்கட்பேறு ;
குறள் ; 61 ;
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை , அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற .
விளக்க உரை ;
ஒருவன் பெறுதற்குரிய
ஊதியங்களுள் அறிய
வேண்டியவற்றை
அறியவல்ல மக்களைப்
பார்க்கிலுஞ் சிறந்தது
யாதாவதிருப்பதாக
எமக்குத் தெரியவில்லை ,
அதாவது ஒருவன்
வாழ்க்கையில் எவ்வளவு
சாதித்தாலும்
அறிவுள்ள பிள்ளைகளைப்
பெறுவதைவிட வேறு
சாதனை எதுவும் இல்லை ,
அதுவே அவன் அடையக்கூடிய
மிகப்பெரிய சிறப்பு
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்