தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு இன்று காலை முதல் யாத்ரீகர்கள் பால்டலில் உள்ள அடிப்படை முகாமில் இருந்து யாத்திரைக்கு புறப்பட்டனர்.வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று முதல் தொடங்கிய நிலையில், இந்த யாத்திரை நமது பாரம்பரியத்தின் தெய்வீக மற்றும் அற்புதமான வெளிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-தெய்வீக ஆசீர்வாதங்களால் பக்தர்களுக்கு புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் கிடைக்க வாழ்த்துகிறேன். மேலும் நாடு அதன் உறுதியை உணர ‘அமிர்த காலில்’ விரைவாக முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.