தமிழ்நாடு மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த குழு அமைத்து தீர்வு காண வேண்டும் – கோவில்பட்டிடாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற தலைவர் மைக்கேல் அமலதாஸ்கோரிக்கை✍️ முழுவிவரம்🌍விண்மீன்நியூஸ்🌎
advertisement by google


கோவில்பட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற கோவில்பட்டி நகர தலைவர் மைக்கேல் அமலதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் 6.2 கோடி தெரு நாய்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தெரு நாய்கள் கடித்து ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தெரு நாய்களால் பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் தெரு நாய்கள் நோய்வாய்பட்டு சாலைகளில் சுற்றி வருகின்றன. இதனால் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google