27.4 C
Kovilpatti
Thursday, September 21, 2023

தூத்துக்குடியில், வரும் வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம்✍️முழுவிவரம்🌍விண்மீன் நியூஸ்🌎

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் பகிர
Previous article
Next article
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *7 – 6 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 77 ; படைமாட்சி ;* *குறள் ; 766 ;* *மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்* *எனநான்கே ஏமம் படைக்கு* . *விளக்க உரை* ; வீரமும் , மானமும் , புகழ் பெற்ற முன்னோர் நெறியில் நடப்பதும் , அரசனால் நம்பப்படுந் தன்மையும் ஆகிய நான்கும் ஒரு படைக்குப் பாதுகாப்பாய குணங்களாகும் , *அதாவது வீரமும் , மானமும்* , *முன்பு நமது வீரர்கள்* *சென்ற வழியில் செல்லுதல்* , *அரசனின் நம்பிக்கைக்குரிய* *வகையில் நடப்பது* *ஆகிய நான்கும்* *வலிமைமிக்க படைக்கு* *சிறந்த பண்பாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles