கோவில்பட்டி , தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வட மாவட்ட முழுவதும் அரசு மருத்துவமணை களில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் , அரசு மருத்துவ மணையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களை மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார். மேலும் கோவில்பட்டி அமுத வல்லி கல்யாண மண்டபத்தில் ஐ பவுண்டேசன் மருத்துவனை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி சேர்மன் ,12 வது வார்டு மற்றும் சிறுபான்மை வடக்கு மாவட்ட துனைச்செயலாளர் அமலி பிரகாஷ் , மகேந்திரன் , மாரிமுத்து அவர்கள்,22வது வார்டு உறுப்பினர் என பல நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.இதே போன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ்,உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார். வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், பகுதிசெயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, பொன்னப்பன், விஜயலட்சுமி, ராஜேந்திரன், பவாணிமார்ஷல், முன்னாள் கவுன்சிலர் சங்கர், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், டென்சிங், மூக்கையா, சுப்பையா, பொன்னுச்சாமி, கதிரேசன். சுரேஷ், செல்வராஜ். சிங்கராஜ், மற்றும் கருணா, மணி, அல்பர்ட், ரவி, சூர்யா, செந்தில்குமார், மகளிர் அணி கவிதாதேவி, ரேவதி, பெல்லா, சத்யா, சந்தனமாரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


