டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய அரசியல் தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று ராகுல் காந்தி பேசியதாகவும் அது அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாகத் தாக்கி பேசியதாகவும் பாஜக கட்சி வழக்கு தொடுத்தது.
வழக்கை விசாரித்த குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு உடனடியாக பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன