காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து 9 பேர் பலி12 பேர் பலத்த காயம்✍️உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாறி மாறி நிவாரணம் அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே இன்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டிருந்தார். இதேபோல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *