என் உயிர் தமிழினமே
8 – 2 – 2023 ; புதன் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 63 ; இடுக்கண் அழியாமை ;
குறள் ; 622 ;
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் .
விளக்க உரை ;
வெள்ளம்போலப் பெருகி
வருகின்ற துன்பமானது ,
அறிவுடையவன் தனது
உள்ளத்திலே அதனை
நீக்கும் எளிய வழியை
நினைத்த அளவிலே
கெட்டொழியும் ,
அதாவது வாழ்க்கையில்
வெள்ளம் போன்ற அளவற்ற
துன்பங்கள் வந்தாலும் ,
அறிவுடையவன் அதனைத்
தன் உள்ளத்தில் நினைத்த
நேரத்திலே மறைந்து
போகும் ,
தன்நம்பிக்கை என்னும்
மந்திரத்தாலே .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்