என் உயிர் தமிழினமே
6 – 2 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 62 ; ஆள்வினை உடைமை ;
குறள் ; 613 ;
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.
விளக்க உரை ;
எல்லோருக்கும் உதவி
செய்தல் என்னும் மேம்பாடு
முயற்சி என்று
சொல்லப்படுகின்ற உயர்ந்த
தன்மையினாலே நிலை
பெறுவதாகும் ,
அதாவது மற்றவர்களுக்கு
உதவி செய்தல் என்ற
உயர்ந்த எண்ணம்
உள்ளவர்களிடம் ,
பெரிய சாதனைகளை
எட்டிபிடிக்கும் விடாமுயற்சி
என்னும் உயர்ந்த
குணமுள்ளவரிடத்தில்
பொருந்தியிருக்கும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்