கிரைம்

கோவில்பட்டியில் கோவில் பூசாரியை அடித்து உதைத்து , காரில் கடத்தி சென்ற கும்பல்✍️ஜீப்பில் அதிரடியாக புரப்பட்டு , மின்னல் வேகத்தில் மீட்ட கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி VOC பள்ளி தெருவை சேர்ந்தவர் உமையலிங்கம்(வயது 35). இவர் கோவில்பட்டி தென்றல் நகரில் சாய் லிங்கா ஆலயத்தை கட்டி பூசாரியாக இருந்து பராமரித்து நடத்தி வருகிறார்.இந்த கோவிலுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோவிலில் அவர் ரூ.10-க்கு உணவு வழங்கி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு உமையலிங்கமும், அவரது கோவிலில் பணிபுரியும் சமையல் மாஸ்டர் கோமதி ராஜ் என்பவரும் கோவிலில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.பசுவந்தனை சாலையில் 2 பேரும் வந்து கொண்டிருந்த போது, அவர்களை பின்தொடர்ந்து காரில் 5 பேர் கும்பல் வந்தது. அங்குள்ள காட்டுப்பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்து இறங்கிய கும்பல் உமையலிங்கத்தை அடித்து உதைத்து கடத்தி சென்றது.தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் உடனடியாக ஜீப்பில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் உமையலிங்கத்தை கடத்தி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர்.அதனை அறிந்த அந்த கும்பல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வாணியம்பட்டி போலீஸ் நிலையம் அருகே உமையலிங்கத்தை இறக்கிவிட்டு தப்பி சென்றது. அந்த நேரத்தில் அங்கு வந்த கோவில்பட்டி போலீசார், அவரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரை கடத்திய கும்பல் யார்?எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.உமையலிங்கம் வட்டிக்கு பணம் வாங்கி கோவிலை பராமரித்து வந்ததாகவும், தற்போது அதனை செலுத்த தாமதமானதால் கடன் கொடுத்தவர்கள் அவரை கடத்தி சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button