வரலாறு

மனிதகுல வரலாற்றை கழுதைகள் எப்படி மாற்றி எழுதின❓ சிறப்பான வரலாற்று கட்டுரை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

✍️மனிதகுல வரலாற்றை கழுதைகள் எப்படி மாற்றி எழுதின❓

advertisement by google

?கட்டுரை தகவல்

advertisement by google

?️?✍️ரோமானியப் பேரரசின் சுமைகளைச் சுமப்பது முதல் நீண்ட தூர வர்த்தகம் வரை, சாதுவான விலங்கான கழுதை வியக்கத்தக்க வகையில் பல விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

advertisement by google

?கழுதைகளின் அதிக சுமை சுமக்கும் சிறப்புத் திறனும், எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் கடினமாக உழைக்கும் பண்பும் கழுதைகளின் சிறப்புக் குணங்களாகும். உலகின் சில பகுதிகளில், இவை, அவமதிப்பு அல்லது கேலிக்குரிய சொற்களுடன் தொடர்பு படுத்தப்படுவது நியாயமற்ற ஒரு நிலைதான். ஆனால் பாரிஸுக்கு கிழக்கே 174 மைல்கள் (280 கிமீ) தொலைவில் உள்ள ஒரு பிரெஞ்சு கிராமத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இது கழுதைகள்/ குறித்து மீண்டும் எழுதத் தூண்டுகிறது.

advertisement by google

ரோமில் உள்ள போயின்வில்லி-என்-வூவர் என்ற கிராமத்தில் பல பழங்காலக் கழுதைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, இன்று நாமறிந்துள்ள கழுதைகளை விட மிகப் பிரம்மாண்டமானவை.

advertisement by google

பிரான்சின் துலூஸில் உள்ள பர்பன் மருத்துவப் பள்ளியில், மானுட உயிரியல் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குநர் லுடோவிக் ஆர்லாண்டோ “இவை பிரம்மாண்டமான கழுதைகள்” என்று கூறுகிறார். “மரபணு ரீதியாக ஆப்பிரிக்காவில் உள்ள கழுதைகளை ஒத்திருக்கும் இந்த மாதிரிகள், குதிரைகளை விடவும் பெரியதாக இருந்தன.

advertisement by google

கழுதை எலும்புக்கூடுகளில் இருந்து டிஎன்ஏவை வரிசைப்படுத்தும் திட்டத்திற்கு ஆர்லாண்டோ தலைமை தாங்குகிறார். இது கழுதை வளர்ப்பின் தொடக்கம் மற்றும் பரவல் குறித்த மிகப் பெரிய ஆய்வின் ஒரு பகுதியாகும். இந்தப் பல்திறன் விலங்குகளுடனான எங்கள் தொடர்பு, நமது இனத்தின் வரலாறு குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. போயின்வில்லி-என்-வூவர்- ல் உள்ள ரோமன் வில்லாவில் வளர்க்கப்படும் கழுதைகள் 155 செமீ ஆகும். இன்றைய கழுதைகளின் சராசரி உயரம் 130 செமீ என்கிறார் ஆர்லாண்டோ. அமெரிக்க மம்மத் ஜாக்ஸ் என்ற ஆண் கழுதை வகை மட்டுமே நவீன கழுதைகளில் இந்த அளவுக்குச் சற்று நெருக்கமாக வளரும். இவை பெரும்பாலும் இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

advertisement by google

போயின்வில்லி-என்-வூவரில் காணப்பட்ட பிரமாண்டமான கழுதைகள், ரோமப் பேரரசின் விஸ்தரிப்புக்கும் /
பிற்காலத்தில் அதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கும் பெரும்பங்கு ஆற்றியிருக்கக்கூடும். ஆனால் இவற்றின் பங்கு பொருட்படுத்தப்படவில்லை என்கிறார் ஆர்லாண்டோ.
2 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ரோமானியர்கள், கோவேறு கழுதைகளை குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்த கலப்பினம்] ராணுவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தினர்” என்று அவர் கூறுகிறார். “அவை ஐரோப்பாவில் இருந்தாலும், அவை வளர்க்கப்பட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் கழுதைகளுடன் இனப்பெருக்கம் செய்விக்கப்பட்டன

ஆனால், ரோமப் பேரரசின் தலையெழுத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த பிரமாண்ட கழுதையினம் மறைவதில் பங்காற்றியிருக்கலாம்.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பரப்புள்ள பேரரசு இல்லையென்றால், அதிக தூரம் சுமை சுமக்கும் விலங்குக்கான தேவையும் இல்லை. எனவே கோவேறு கழுதைகளை உற்பத்தி செய்வதால் எந்தப் பொருளாதார லாபமும் இல்லை.”

மனித வரலாற்றில் கழுதைகள் எவ்வாறு தங்கள் பங்கை ஆற்றியுள்ளன என்பதைக் கண்டறிய, 37 ஆய்வகங்களைச் சேர்ந்த 49 விஞ்ஞானிகள் அடங்கிய சர்வதேச குழு, உலகம் முழுவதிலும் உள்ள 31 பழமையான மற்றும் 207 நவீன கழுதைகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தியது. மரபணு மாடலிங் நுட்பங்களைப் பயன்படுத்தி, காலப்போக்கில் கழுதைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டறிய முடிந்தது.பட மூலாதாரம், Getty Imagesசுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு கென்யா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பகுதி ஆகியவற்றில் பெரும்பாலும் காட்டுக் கழுதைகள்தான் கால்நடை வளர்ப்பாளர்களால் வீட்டில் வளர்க்கப்பட்டன என்று கண்டறிந்தனர். இன்று வாழும் அனைத்து நவீன கழுதைகளும் இந்த ஒற்றை வளர்ப்பு நிகழ்விலிருந்து வந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

இருந்தாலும், ஏமனிலும் கழுதைகளை வளர்க்கும் வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஆப்பிரிக்காவில் கழுதைகளின் இந்த முதல் வளர்ப்பு, ஒரு காலத்தில் பசுமையாக இருந்த சஹாராவின் வறட்சியுடன் காலத்தால் ஒத்திருப்பது சுவாரஸ்யமான விஷயம். ஏறக்குறைய 8,200 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை திடீரென வலுவிழந்து, மனிதர்களின் மேய்ச்சல் செயல்பாடு அதிகரித்தது, மழைப்பொழிவு குறைவதற்கும், பாலைவனம் மற்றும் சஹேல் பகுதி படிப்படியாக பரவுவதற்கும் வழிவகுத்தது. தொடர்ந்து அதிகரித்த கடுமையான சூழலுக்குக் கழுதை வளர்ப்பு உதவிகரமாக இருந்திருக்கலாம்.

காலநிலை மாற்றங்கள் காரணமாக, உள்ளூர் மக்கள் தங்களைச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்று நம்புகிறோம்.” என்கிறார் ஆர்லாண்டோ. “கழுதைகளின் உதவியுடன், நீண்ட தூரம் மற்றும் கடினமான நிலப்பரப்புகளுக்கு அதிக அளவு சுமைகளை கொண்டு செல்வதற்கான அத்தியாவசியத் தேவையை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கலாம்”.

கழுதை வளர்ப்பு தொடங்கியவுடன் அவற்றின் எண்ணிக்கை ஆரம்பத்தில் பெருமளவு குறைந்து, பின்னர், வேகமாக அதிகரித்தது. “இது வளர்ப்பு
விலங்குகள் விஷயத்தில் பொதுவாக நடக்கும் நிகழ்வு தான்.” என்று ஆய்வில் ஈடுபட்டுள்ள துலூஸின் மானுட உயிரியல் மற்றும் மரபியல் மையத்தின் மக்கள்தொகை மரபியலாளர் ஈவ்லின் டோட் கூறுகிறார்.
ஒரு குறிப்பிட்ட இனக் கழுதைகளைத் தேர்ந்தெடுப்பதால் எண்ணிக்கை குறைந்து, பின்னர் அவற்றை இனப்பெருக்கம் செய்விப்பதால், எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கழுதைகள் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, வடமேற்கே சூடான் மற்றும் எகிப்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக அவர்களின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது, அங்கு கழுதைகளின் எஞ்சிய பகுதிகள் 6,500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் தளங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடுத்த 2,500 ஆண்டுகளில், இந்த புதிய வளர்ப்பு இனங்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் பரவி, இன்று காணப்படும் பரம்பரைகளை உருவாக்கின.

ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆராய்ச்சியாளர் லர்கே ரெக்ட் கருத்துப்படி, தமது தாங்கும் திறன் மற்றும் அதிக சுமைகளைச் சுமக்கும் திறன் காரணமாக, மனித இனத்தின் பொருட்களைக் கொண்டு செல்லும் திறனில் மாபெரும் மாற்றத்தைக் கழுதைகள் ஏற்படுத்தின. “மெசபடோமியாவின் யூப்ரடீஸ், டைக்ரிஸ் மற்றும் எகிப்தின் நைல் போன்ற ஆறுகள் கனரக மற்றும்/அல்லது பெரிய பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட நிலையில், கழுதைகள் நில வழியான தொடர்புகளைப் பெருமளவு அதிகரித்தன.” என்று அவர் கூறுகிறார்.

கிமு மூன்றாம் மில்லினியத்தில் தான் வெண்கலத்தின் பயன்பாடும் அதிகரித்ததாக ரெக்ட் கூறுகிறார். “கழுதைகள் கனமான தாமிரத்தை நீண்ட தூரத்திற்கும், மெசபடேமியா உள்ளிட்ட இயற்கையான தாது இல்லாத(அல்லது மிகச் சிறிய அளவில் மட்டுமே) பகுதிகளுக்கும் கொண்டு சென்றிருக்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.

ஆனால் அதே காலகட்டத்தில் கழுதைகள் மற்றும் பிற ஈக்விட் எனப்படும் கழுதையினமும் போர் முறையையே மாற்றின. “போர்களில் பங்கேற்கும் சக்கர வாகனங்களை இழுக்க இவை பயன்படுத்தப்பட்டன. இராணுவத்திற்குத் தேவையான பொருட்களின் போக்குவரத்துக்கும் இவை பயன்படுத்தப்பட்டன.” என்கிறார் ரெக்ட்.

கிமு இரண்டாம் மில்லினியத்தில் கட்டடங்களுக்கான அடித்தளம் அமைக்கும் போதும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போதும் கழுதைகள் பலியிடப்பட்டன. என்றும் அவர் கூறுகிறார்.

துருக்கியில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த மூன்று கழுதைகள்தாம், ஆர்லாண்டோவும் அவரது சகாக்களும் ஆய்வு செய்த மிகப் பழமையான மாதிரிகள். “அவை 4,500 ஆண்டுகள் பழமையான ரேடியோகார்பன் பதிவுகளைக் கொண்டிருந்தன. நவீன ஆசியாவில் உள்ள கழுதைகளின் மரபணுவுடன் ஒத்திருந்தன.” என்று டோட் கூறுகிறார். இந்தக் கால கட்டத்தில்தான் வளர்ப்பு கழுதையின் ஆசிய வகை மற்ற வம்சாவளி கழுதைகளிடமிருந்து வேறுபடத் தொடங்கியதுகழுதைகள், தங்களின் சக இனமான குதிரைகளை விடவும் மனிதர்களின் நிலையான துணையாக இருந்துள்ளன என்பதையும் ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. சுமார் 4,200* ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப்பட்ட நவீன உள்நாட்டு குதிரைகள் மனித வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று ஆர்லாண்டோ கூறுகிறார். “இப்போது, கழுதைகளின் தாக்கம் அதை விட அதிகமாக இருந்ததை எங்கள் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

குதிரைகள் மற்றும் நாய்களுக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவத்தைப் பார்க்கும் போது, கழுதைகளின் நிலை சற்று மோசமாகவே உள்ளது. இன்று உலகின் பல பகுதிகளில் கழுதைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருந்தாலும், சில இடங்களில், அவை எப்போதும் போல இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருப்பதையும் காணலாம்.

உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் கழுதை ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.” என்கிறார் டோட். “ஒவ்வொரு ஆண்டும் அதன் எண்ணிக்கை 1% அதிகரித்து வருகிறது. வளர்ந்த நாடுகளில், கழுதைகள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பம் உட்பட பல வளரும் சமூகங்களில், மக்கள் இன்னும் போக்குவரத்துக்குக் கழுதைகளை நம்பியுள்ளனர்.

கழுதைகளின் மரபணு அமைப்பைப் புரிந்து கொண்டால் அவற்றின் இனப்பெருக்கத்துக்கும் மேலாண்மைக்கும் எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ரெக்ட் கூறுகிறார்.எதிர்கால ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம், வளர்க்கப்படும் கழுதைகளின் நெருக்கமான இனமாக ஒரு காட்டு இனத்தைக் கண்டறிவது தான். ஆர்லாண்டோ, டோட் மற்றும் அவர்களது சகாக்கள் மூன்று இனங்களை அடையாளம் கண்டுள்ளனர். “ஆப்பிரிக்க காட்டுக் கழுதையின் வழித்தோன்றல்தான் இன்றைய கழுதை என்பது எங்களுக்குத் தெரியும்” என்கிறார் டோட். “நமக்குத் தெரிந்த மூன்று கிளையினங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ரோமானிய காலத்தில் கிபி 200 இல் அழிந்து போனது, இரண்டாவது அநேகமாக காடுகளில் அழிந்து விட்டது, மூன்றாவது வேகமாக அழிந்து வரும் இனம்.”

எவ்வாறாயினும், ஆப்பிரிக்க காட்டுக் கழுதையின் இன்னும் அடையாளம் காணப்படாத பிற துணை இனங்கள் உள்ளனவா அல்லது இல்லையா என்பதை அறிய அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. இது கழுதையின் மரபணு வரலாற்றைப் பற்றிய நமது புரிதலை மேலும் மேம்படுத்த உதவுவதுடன் மனித வரலாற்றில் அவற்றின் முக்கிய பங்கைப் பற்றி மேலும் வெளிப்படுத்தக் கூடும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button