உலக செய்திகள்

இந்தியாவுடன்இணைத்து விடுங்கள்..!” – பாக்கிஸ்தான் அரசுக்கெதிராக போராடும் கில்ஜித்-பால்டிஸ்தான் மக்கள்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், உணவு நெருக்கடியும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன. அத்தியாவசிய பொருள்களின் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதால் மக்கள் பரிதவிப்புக்குளாகி இருக்கின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பால்டிஸ்தானை (G-B) இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

advertisement by google

ஜம்மு-காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்ஜித்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வருகிறது. ஆனால் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கில்ஜித்-பால்டிஸ்தானில் கடந்த 12 நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தப் போராட்டத்தில் கார்கில் சாலையை மீண்டும் திறப்பதற்கும், இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள கார்கில் மாவட்டத்தில் சக பால்ட்டிகளுடன் மீண்டும் இணைவதற்கும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

advertisement by google

போராட்டத்தின்போது அந்தப் பகுதி மக்கள், “பாகிஸ்தான் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது. இந்தப் பகுதியின் இயற்கை வளங்களைச் சுரண்டுவது உள்ளிட்ட பல பிரச்னைகளைச் செய்துவருகிறது” எனத் தெரிவித்திருக்கின்றனர்.

advertisement by google

இந்தப் பகுதியில், நிலம் தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. கில்ஜித் -பால்டிஸ்தான் பகுதி நிலங்களை பாகிஸ்தான் அரசைச் சேர்ந்தவர்கள் அபகரிப்பதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், கில்ஜித்-பால்டிஸ்தான் நிர்வாகம், “இந்த நிலம் பாகிஸ்தான் அரசைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும் மாற்றப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.

advertisement by google

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராகப் பரவலான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button