என் உயிர் தமிழினமே
29 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 98 ; பெருமை ;
குறள் ; 972 ;
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் , சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
விளக்க உரை ;
எல்லா உயிர்களுக்கும்
பிறப்பு ஒத்திருந்தாலும் ,
அவைகள் செய்கின்ற
தொழில் வேறுபாட்டினால்
பெருமை ஒத்திருப்பது
இல்லை ,
அதாவது மக்கள் பிறப்பால்
ஒத்திருந்தாலும் , அவர்களில்
பெருமை , சிறுமை என்னும்
சிறப்புகள் அவர்கள் செய்யும்
தொழில் மற்றும் பிறருக்கு
செய்யும் நன்மைகள் ,
தீமைகள் இவற்றால்
ஒத்திருப்பது இல்லை.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்