திருப்பூரில் திருமணமானதை மறைத்து வேறொரு பெண்ணை காதலித்ததோடு சாதியின் பெயரை கூறி திட்டியதாக எழுந்த புகாரில் காவலர் வன்கொடுமை வழக்கில் கைது ✍️காவலர் வன்கொடுமை சட்டத்தில் கைது திருப்பூரில் பரபரப்பு ✍️ முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

திருப்பூரில் திருமணமானதை மறைத்து வேறொரு பெண்ணை காதலித்ததோடு சாதியின் பெயரை கூறி திட்டியதாக எழுந்த புகாரில் காவலர் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் அருள் குமார் . திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் காவலராக பணி பணிபுரிந்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணமானதை மறைத்து அவிநாசியைச் சேர்ந்த 27 வயது பெண்ணை காதலித்து வந்ததோடு திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

இதையடுத்து வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனக் கூறி அந்த பெண்ணின் ஜாதியின் பெயரைக் கூறி திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலடைந்த அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பெண்ணின் தாயார், அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பெண்ணின் தாயார் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அருள்குமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *