கோவில்பட்டி மந்திதோப்பில், அம்மா பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அன்னதான பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி நடந்தது. அதைதொடர்ந்து காலை 8 மணிக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.35-க்கு அன்னதான பூஜையும், சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் மாரிஸ் வரன் பூஜைகளை செய்தார்கள். இவ்விழாவில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஜெயராம், தனுஷ், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பழனியம்மாள், சாந்தி, லட்சுமி, மாரித்தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *