தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தாரம்புதூர் திரிபுர சுந்தரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு,மகா கும்பாபிஷேக விழா✍️ திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்✍️

advertisement by google

advertisement by google

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூர் திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

advertisement by google

கன்னியாகுமரி மாவட்டம் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தாரம்புதூர் திரிபுர சுந்தரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு
கும்பாபிஷேக விழா (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், தேவி பூஜை, ஜலாதிவாசம், மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு கலச பூஜை,அத்தாள பூஜை போன்றவை நடைபெற்றது. 2-வது நாளானஇன்று (வெள்ளிக்கி ழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோ மம், கலச பூஜை, காலை 8 மணிக்கு சிற்றுண்டி, அதனை அடுத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, அதனைத் தொடர்ந்து மாபெரும் சமபந்தி விருந்து ஆகியவை நடைபெற்றது.

advertisement by google

கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்ட பகுதி கிராம மக்கள் திலானவர் கலந்து கொண்டனர் . கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சாரல் மழை பெய்து பக்தர்களை மகிழ்ச்சி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் அமுதன், துணை தலை வர் கணபதி, பொருளாளர் சிவ.பொன்முடி, செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர்கள் தமிழ்சுதன், சிவசங்கரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button