பயனுள்ள தகவல்

கப்பலின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் ப்ரொப்பல்லர்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்✍️பல வருஷமானாலும் இது மட்டும் துருப்பிடிக்காது! இந்த கருவியின் உற்பத்திக்கு பின்னால் இருக்கும் சுவாரஷ்யமான தகவல்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

பல வருஷமானாலும் இது மட்டும் துருப்பிடிக்காது! இந்த கருவியின் உற்பத்திக்கு பின்னால் இருக்கும் சுவாரஷ்யமான தகவல்

advertisement by google

கப்பலின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் ப்ரொப்பல்லர்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

advertisement by google

கப்பல்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ப்ரொப்பல்லர்களும் ஒன்று. என்னதான் கப்பலும், எஞ்ஜினும் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், ப்ரொப்பல்லர்கள் சிறிதளவு சேதப்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டோ இருந்தால் அந்த கப்பலால் ஒரு அடிகூட நகர முடியாது. இதுவும் மிக சிறந்த நிலையில் இருந்தால் மட்டுமே ஓர் கப்பலால் தொடர்ச்சியாக ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும்.

advertisement by google

இவற்றையே கப்பல் கட்டுமான நிறுவனங்கள் எப்படி தயாரிக்கின்றன?, என்னென்ன வகைகளில் இவை இருக்கின்றன?, என்பதுபோன்ற சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

advertisement by google

ப்ரொபல்லர்கள் கப்பலுக்கு வெளியே கடலுக்கு அடியில் இருக்கக் கூடியவை. மிக தெளிவாக கூற வேண்டுமானால் அதன் ஆயுட்காலம் முடியும்வரை நீருக்குள்ளேயே இருக்க வேண்டும். இவ்வாறு அது இருக்கையில் எளிதில் கடல் உப்பு நீரால் அது பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக கணிசமான யுக்திகளை கப்பல் கட்டுமான நிறுவனங்கள் கையாளுகின்றன.

advertisement by google

அலுமினியம் மற்றும் துருப்பிடிக்காத எஃகு கலவையையே ப்ரொபல்லர்கள் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், நிக்கல், அலுமினியம் மற்றும் வெண்கல கலவைகளால் ஆனதே இந்த ப்ரொப்பல்லர்கள். இந்த கூறுகளால் உருவாக்கப்பட்ட ப்ரொபல்லர்கள் மிகவும் உறுதியானவையும் கூட. அதேநேரத்தில் சற்று எடைக் குறைவானதாகவும் இருக்கும். பிற உலோக பொருட்களைக் காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் வரை இலகுவானதாக இருக்கும்.

advertisement by google

3 பிளேட் ப்ரொபல்லர், 4 பிளேட் பிளேட் ப்ரொபல்லர், 5 பிளேட் ப்ரொபல்லர் மற்றும் 6 பிளேட் ப்ரொபல்லர் என பல வகைகளில் அது இருக்கின்றது. கப்பல்களின் உருவம், பயன்பாட்டு தன்மை ஆகியவற்றை பொருத்தே அக்கப்பலுக்கு எந்த ப்ரொபல்லர் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை கப்பல் கட்டுமான நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன.

advertisement by google

குறைந்த பிளேடுகளைக் கொண்ட ப்ரொபல்லர்களின் உற்பத்தி செலவும் குறைவு. இதேபோல் அவற்றை பராமரிப்பதும் மிக சுலபம். இதன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி செலவும் அதிகம், பராமரிப்பதும் சற்று கூடுதல் தேவையாக இருக்கின்றது. இந்த ப்ரொபல்லர்கள் 360 டிகிரி சுழலும் கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது, கப்பல்களுக்கு ஆபத்தான சூழல் ஏற்படும்போது கப்பலை அதிக வேகத்தில் எதிர்திசையில் திரும்ப உதவியாக இருக்கும். இதன் வாயிலாக பனிக் கட்டி அல்லது தீவுகளுடன் ஏற்பட இருக்கும் மோதலை தவிர்க்க முடியும்.

ப்ரொபல்லர்கள் கன்டெயினர் கப்பலில் வேறு விதமான அளவிலும், கேரியர் மற்றும் டேங்கர் கப்பல்களில் வேறு விதமான அளவிலும் பயன்படுத்தப்படுகின்றது. கன்டெயினர் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ப்ரொப்பல்லர் 0.74 டி/டி (diameter of propeller /design draught), பெரிய கேரியர் மற்றும் டேங்கர் கப்பல்களில் 0.65 டி/டி என்கிற அளவிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அளவுள்ள ப்ரொபல்லர்கள் சீராக சுழல்வதனாலேயே கப்பல்களால் இடம் விட்டு இடம் பெயர முடிகின்றது. இவை முன் மற்றும பின் நோக்கி சுழல முடியும். இதன் வாயிலாக கப்பலை தேவைப்பட்டால் கார்களை ரிவர்ஸ் செய்து கொள்ள முடியும். பெரும்பாலான கப்பல்களில் ஒற்றை ப்ரொப்பல்லர்களே காணப்படுகின்றன. அதேவேலையில், இரு ப்ரொப்பல்லர்கள் கொண்ட கப்பல்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

அதிக எடையுள்ள சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லும் கப்பல்களே இரு ப்ரொப்பல்லர்களுடன் காட்சியளிக்கின்றன. அதேவேலையில் அரிதினும் அரிதாக மூன்று ப்ரொப்பல்லர்களைக் கொண்ட கப்பல்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவையே அதிக வேகத்தில் கப்பல் செல்லவும், விரும்பிய திசையில் கப்பல் திரும்பவும் உதவியாக இருக்கின்றன.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button