சினிமா

1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் கோயம்புத்தூரில் பிறந்த நடிகர் சத்தியராஜின் வாழ்க்கை குறிப்பு✍️இன்று சத்யராஜின் பிறந்த நாளையொட்டி, அவர் நடிக்கும் 230வது படத்திற்கு ‘வெப்பன்’ என பெயரிட்டு, டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, ஹீரோ தற்போது குணச்சித்திர நடிகர் என நடித்துக் கொண்டே இருப்பவர் சத்யராஜ். இவர் நடித்த படங்களின்பல்வேறு கதாபாத்திரங்கள் இன்னும் தமிழ் சினிமாவில் ஐகானிக் கேரக்டர்களாக வலம் வருகின்றன. அவருடைய குடும்பம் எது, மனைவி யார், குழந்தைகள் பற்றிய விவரங்களை நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

advertisement by google

​படிப்பும் நடிப்பில் ஆர்வமும்

advertisement by google

1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் கோயம்புத்தூரில் பிறந்தார். தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை கோயம்புத்தூரில் முடித்தார்.

advertisement by google

இவருக்கு இவருடைய பெற்றோர்கள் வைத்த பெயர் ரங்கராஜ். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பியூசி படிக்கும்போது அவருடைய வகுப்புத் தோழனாய் வந்தவர் தான் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன். அவரிடமிருந்து தான் இவருக்கு சினிமா மற்றும் பெரியார் கொள்கைகள், திராவிட அரசியல் மீதான பற்று உருவாகியது.

advertisement by google

​வில்லன் – ஹீரோ – குணச்சித்திர நடிகர்

advertisement by google

தொடக்க காலத்தில் நல்ல உயரமாக இவர் இருப்பதால் வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக வந்தன. அதிலும் ரஜினி, கமலையடுத்து வில்லன் கேரக்டருக்கு மிகப் பொருத்தமான நடிகர் என பெயர் பெற்றார். அதில் நூறாவது நாள் போன்ற படங்கள் மிக முக்கியமானவை.

advertisement by google

அதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ வாய்ப்பும் வரத் தொடங்கியது. 1986 ஆம் ஆண்டு முதல் ஹீரோவாக நடித்தார். அடுத்தடுத்து குணச்சித்திர நடிகர் வாய்ப்பையும் அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர்.

advertisement by google

​நடிப்பின் மீது காதல்

கடலோரக் கவிதைகள் தொடங்கி. அமைதிப்படை, மிஸ்டர் பாரத், வால்டர் வெற்றிவேல் என வரிசை நீண்டு ராஜா ராணி, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, நண்பன், பாகுபலி கட்டப்பா என அவர் நடித்த கதாபாத்திரங்களைப் பார்த்தாலே நம்மால் அவருடைய நடிப்பின் மீதான காதலை புரிந்து கொள்ள முடியும்.

​சத்யராஜின் மனைவி

சத்யராஜ் சினிமா துறையில் இருந்தாலும் பெற்றோரால் பார்த்து நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.

1978 ஆம் ஆண்டு மகேஸ்வரி சுப்பையா என்பவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் தன்னுடைய மனைவியை தான் செல்லும் அரசியல் நிகழ்வுகள், சினிமா விழாக்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வாராம். குழந்தை

​இரண்டு குழந்தைகள்

இரண்டு குழந்தைகள். ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதன்பிறகு மகேஸ்வரிக்கு அவர்களை கவனித்துக் கொள்ளவே நேரம் போதவில்லையாம்.

சத்யராஜின் முதல் மகன் தான் நடிகர் சிபி சத்யராஜ். அவரை தன்னுடைய திரையுலக வாரிசாக வளர்த்தெடுத்துவிட்டார்.

இன்று சத்யராஜின் பிறந்த நாளையொட்டி, அவர் நடிக்கும் 230வது படத்திற்கு ‘வெப்பன்’ என பெயரிட்டு, டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

எம்.எஸ். மன்சூர் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உட்பட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button