தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தடுக்க வலியுறுத்தியும்✍️ பள்ளி சிறுவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்து இயக்கும் ஓட்டுநர்களுக்கு உளவியல் ரீதியான சான்று கட்டாயம் என்பதை சட்டமாக்க வலியுறுத்தியும்✍️நகரத்தில் இயங்கும் மினி பேருந்துகள், தங்களுக்கு ஒதுக்கப்படாத நிறுத்தத்தில் திடீரென நிறுத்துவதும், அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பானை பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்தியும், அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி தமாக நகர செயலாளர் ராஜகோபால் தலைமையில் கோரிக்கை மனு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

பெறுநர்
தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்
தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் எண் 77 4வது கேகே நகர் ரேஸ்கோர்ஸ் காலனி மதுரை

advertisement by google

கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகே கடந்த 15ஆம் தேதி காலை நடந்த விபத்தில் பள்ளி மாணவர் ஸ்ரீ புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் போது, விபத்தை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய ஓட்டுனரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானம் இல்லாத ஓட்டுநரின் செயலுக்கு அந்தப் பள்ளி நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

advertisement by google

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளிவந்துள்ளன. இதில் அந்தப் தனியார் பள்ளி பேருந்து மிகவும் வேகமாக செல்வது போன்று இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி பேருந்துகளின் ஆய்வின் போது ஓட்டுனர்களுக்கு மனிதாபிமானம் தொடர்பாகவும் வகுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுவும் பள்ளி சிறுவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்து இயக்கும் ஓட்டுநர்களுக்கு உளவியல் ரீதியான சான்று கட்டாயம் என்பதை சட்டமாக்க வேண்டும்.

advertisement by google

கோவில்பட்டியை பொருத்தவரை பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர். ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத வயதில் அதிவேகமாக அவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்லாது எதிரே சாலையில் பயணிப்போரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக தனியார் பள்ளிகளில் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது என கூறியுள்ளதால், மாணவ மாணவிகள் அருகே உள்ள நண்பர் மற்றும் உறவினர் வீடு வரை இருசக்கர வாகனங்களில் வந்து, அங்கே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். தங்களுக்கான கல்வி கட்டணத்தில் மட்டும் குறிக்கோளாக இருக்கும் தனியார் பள்ளிகள் இவற்றை கண்டு கொள்வதில்லை.

advertisement by google

எனவே காவல்துறையும் வட்டாரப் போக்குவரத்து துறையும் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு, பள்ளி குழந்தைகள் வாகனங்களை இயக்கினால் அவர்களது பெற்றோருக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.

advertisement by google

மேலும், இரவு நேரங்களில் அதிக சத்தம் கொண்ட சைலன்சர் பொருத்திய இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் இயக்கி வருகின்றனர். இது போன்ற நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதேபோல் நகரத்தில் இயங்கும் மினி பேருந்துகளும் தங்களுக்கு ஒதுக்கப்படாத நிறுத்தத்தில் திடீரென நிறுத்துவதும் அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பானை பயன்படுத்துவதும் என பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றனர். அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button