என் உயிர் தமிழினமே
திருக்குறள் ;
1 – 8 – 2022 ; திங்கள் கிழமை ;
அதிகாரம் ; 23 ; ஈகை ;
குறள் ; 229 ;
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
விளக்க உரை ;
தமது பொருட் குறைவை
நிறைத்தற் பொருட்டுப்
பிறர்க்குக் கொடாது தாமே
தனித்தவராய் உணவு
கொள்ளுதல் ,
பிச்சை எடுப்பதைப் பார்க்கிலும்
துன்பந் தருவதாகும் ,
அதாவது ஒருவன் தான்
தேடி சேர்த்த செல்வங்களை
(உணவை) எளியவர்களுக்காக
கொடுத்து வாழாமல் தானே
உண்ணு வாழுதல் பிச்சை
எடுப்பதை விட கொடிய
செயலாகும்.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்