உலக செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை, எதிர்பார்ப்பில் பக்தர்கள்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்*

advertisement by google

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு செபமாலை-1, மதியம் 12 மணிக்கு செபமாலை-2, மாலை 3 மணிக்கு செபமாலை-3, மறையுரை, அருளிக்க ஆசீர், இரவு 7.15 மணிக்கு செபமாலை-4, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

advertisement by google

இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு பாதிரியார் லெரின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் கொடி பவனி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி, 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கொடியேற்றம் நடக்கிறது.

advertisement by google

மதியம் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி 6-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி, 11.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது.

advertisement by google

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பனிமயமாதா பேராலய அதிபரும், பங்குதந்தையுமான குமார் ராஜா, உதவி பங்குதந்தை பால் ரோமன், களப்பணியாளர் பெல் கிளிண்டன் மற்றும் பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button