மண்பானை fridge:
கரண்ட் வேண்டாம், அதிக விலை இல்லை, கெடுதிகள் இல்லை.
முயன்று பார்கலாமே…வெற்றி கண்டுள்ளார் நண்பர் ஒருவர்… அவரது அனுபவம் இது….
சாதாரண மண் பானை ஒன்று போதும்.
நிலத்திற்கு மேலேயும் கீழேயும் வளரும் அனைத்துக் காய்கறிகளும் உள்ளே வைக்கலாம்.
இது குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
குளிர்சாதன பெட்டியிலிருந்து காய்கறிகள் அல்லது பழங்களை வெளியே எடுத்தவுடன், அரை நாளில் அது மோசமாகி விடும், ஆனால் மண்பானையிலிருந்து வெளியே எடுத்தால், இன்னும் இரண்டு நாட்களுக்கு அது புதியதாக இருக்கும்.
மேலே உள்ள படத்தில், தக்காளி, கத்திரிக்காய் மற்றும் அவரக்காய் ஆகியவை எங்கள் வீட்டிலேயே வளர்க்கப்பட்டன.
பானைக்குள் தண்ணீர் விடக்கூடாது.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர் வெளியே மட்டுமே தெளிக்கப்பட வேண்டும்.
பானை தரையில் மட்டுமே உள்ளது. மணலில் இல்லை.
வெயிற் காலங்களில் மணலின் மீது பானையை வைத்து மணலில் சிறிதளவு தண்ணீர் தெளித்து விட பானையும், உள்ளே காயும் குளுமையாக இருக்கும்.