உலக செய்திகள்

உலகநாடுகளே எதிர்பார்க்கும் யுக்ரேன் நிலைமை குறித்து அமெரிக்க ஜோ பைடனிடம் , இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசியது என்ன?✍️முழுவிவரம்?விண்மீன்நியூஸ்?

advertisement by google

உலநாடுகளே எதிர்பார்க்கும் யுக்ரேன் நிலைமை குறித்து அமெரிக்க ஜோ பைடனிடம் , இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசியது என்ன?*

advertisement by google

யுக்ரேனில் உள்ள குடிமக்களின் பாதுகாப்புக்கும் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான தமது காணொளி சந்திப்பின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

advertisement by google

இந்த மெய்நிகர் சந்திப்பின் பெரும்பாலான நேரத்தை இரு தலைவர்களும் யுக்ரேன் விவகாரம் பற்றி பேசுவதிலேயே செலவிட்டனர். ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, யுக்ரேன் எதிர்கொணடு வரும் நெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவு குறித்து அமெரிக்கா குழப்பமான எண்ணத்தைக் கொண்டுள்ள நிலையில், அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசியிருக்கிறார்.இந்த சந்திப்பு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ள நரேந்திர மோதி, “யுக்ரேனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நேரத்தில் எங்கள் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.”சில வாரங்களுக்கு முன்பு வரை 20,000 இந்தியர்கள் யுக்ரேன் நாட்டில் சிக்கித் தவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளம் மாணவர்கள்,” என்று மோதி குறிப்பிட்டுள்ளார்.அதிபர் பைடனுடன் கலந்துரையாடலின்போது, “சமீபத்தில் புச்சாவில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்தி மிகவும் கவலையளிக்கிறது. நாங்கள் அதை உடனடியாக கண்டித்து நியாயமான விசாரணையை கோரினோம். ரஷ்யா, யுக்ரேன் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் அமைதிக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் பிரதமர் மோதி கூறினார்.

advertisement by google

நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறிக் கிடப்பதைக் காண்பிக்கும் யுக்ரேனின் புச்சாவில் இருந்து திகிலூட்டும் காட்சிகளும் படங்களும் வெளிவந்தன. அது தொடர்பான தகவல்கள், தூசி மற்றும் குப்பைகளாக நிறைந்ததாக மாறிப்போன நகரம், ரஷ்ய ராணுவ நடவடிக்கைக்கு சாட்சியமாக இருந்து சர்வதேச கண்டனத்தைத் தூண்டின.

advertisement by google

யுக்ரேன் மீதான படையெடுப்பில் இந்தியா வெளிப்படுத்தும் எதிர்வினை குறித்தும் பைடனிடம் பிரதமர் மோதி விளக்கினார்.

advertisement by google

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மோதி, “யுக்ரேன், ரஷ்யா ஆகிய இரு நாட்டு அதிபர்களுடன் நான் பலமுறை தொலைபேசியில் பேசினேன். நான் அமைதிக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி, யுக்ரேன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிபர் புதினுக்கும் யோசனை கூறினேன். யுக்ரேன் விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது,” என்று கூறினார்.”யுக்ரேனில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கு இந்தியா முக்கியத்துவம் அளித்தது. எங்கள் சார்பாக, யுக்ரேன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளோம். யுக்ரேனின் கோரிக்கையின் பேரில், மிக விரைவில் மற்றொரு மருந்துப் பொருட்கள் இடம்பெற்ற சரக்குகளை அந்நாட்டுக்கு அனுப்ப உள்ளோம்,” என்று மோதி தெரிவித்தார்.

advertisement by google

“கடந்த ஆண்டு செப்டம்பரில் நான் வாஷிங்டனுக்கு வந்தபோது, ​​பல உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையால் பங்களிக்க முடியும் என்று சொன்னீர்கள். நான் உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன். உலகின் இரண்டு பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளாக விளங்கும் நாங்கள் இயற்கையான பங்காளிகள்,” என்று பைடனிடம் மோதி குறிப்பிட்டார்.

advertisement by google

“உங்கள் பதவிக் காலத்தின் தொடக்கத்திலேயே மிக முக்கியமான முழக்கமாக ‘ஜனநாயகத்தால் வழங்க முடியும்’ என்ற வாசகத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த முழக்கத்தை அர்த்தமுள்ளதாக்க இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வெற்றியே சிறந்த வழியாகும்” என்று பிரதமர் மோதி வலியுறுத்தினார்.மோதியும் பைடனும் இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் மற்ற குவாட் நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் தலைவர்களுடனான சந்திப்பின்போது கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ​​”இருதரப்பு விரிவான உலகளாவிய கேந்திர கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவர். இரு தரப்பிலும் பரஸ்பரம் வழக்கமான மற்றும் உயர் மட்ட ஈடுபாட்டைத் தொடர இது உதவும்” என்று கூறியது.அதுபோலவே மோதியுடனான உரையாடலுக்கு முன்பாக, “இரு தரப்பு இணைப்புகளை இந்த கலந்துரையாடல் மேலும் ஆழப்படுத்தும் என எதிர்நோக்குகிறோம்,” என்று கூறியிருந்தார்.

யுக்ரேன் விவகாரத்தில் இந்தியாவின் சமீபத்திய நிலை

இதற்கிடையே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நாவுக்கான இந்திாயவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, “எந்தவொரு ஆயுத மோதல்கள் அல்லது ராணுவ மோதல் நடந்தாலும் அவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்

. யுக்ரேனில் இருந்து வெளிவரும் தகவல்களில் இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் அகதிகளாகவும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாகவும் உள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button