பக்தி

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா- கொடியேற்றத்துடன் தொடக்கம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா-இன்று காலை கொடியேற்றத்துடன் தொடக்கம்*

advertisement by google

கோவில்பட்டி:

advertisement by google

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலையில் தொடங்கியது.

advertisement by google

அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட் டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப் பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணி மேல் 6.30 மணிக்குள் கொடி மரத்தில் கொடியேற்றம் நடை பெற்றது.

advertisement by google

பின்னர் சுவாமி அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகங் கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

advertisement by google

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கோவில் பட்டி டி.எஸ்.பி.உதயசூரியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, தமிழ் மாநில காங் கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் மற்றும் அனைத்து மண்டக படிதாரார்கள் கலந்து கொண்டனர்.

advertisement by google

இந்த விழா இன்று தொடங்கி வரும் 15-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங் களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் விழாக்கள் நடைபெறும்.

advertisement by google

1-ம் திருநாளான இன்று பிராமணாள் சமூகம் சார்பில் இரவு 7மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது. 2-ம் திருநாளான 6-ந்தேதி பூலோகப்பாண்டியத்தேவர் மற்றும் ரத்தினவேல்சாமித் தேவர் சார்பில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 3-ம் திருநாளான 7-ந்தேதி இல்லத்துப்பிள்ளைமார் சமூகம் சார்பில் பூதவாகனம் – காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது.

4-ம் திருநாளான 8-ந்தேதி மேடைத்தளவாய் கட்டளை தாரர் சார்பில் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதிஉலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. 5ம் திருநாளான 9-ந்தேதி விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத் தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

6-ம் திருநாளான 10-ந்தேதி அழகர் ஜூவல் லர்ஸ் அழகிரிசாமி செட்டியார் சார்பில் இரவு 7 மணிக்கு யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.

7-ம் திருநாளான 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில், நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 8-ம் திருநாள் 12-ம் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார் கள் சங்கம் சார்பில் குதிரை வாகனம், கிளி வாகனத்தில் சுவாமி – அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

9-ம் திருநாளான 13-ந் தேதி காலை 9 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. 9-ம் திருநாளான வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு யானை முன் செல்ல வாண வேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி – அம்பாள் வீதி உலா நடை பெறுகிறது.

10-ம் திருநாளான 14-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி – அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

11-ம் திருநாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வாணவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங் கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button