கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை✍️இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வக்கீல் அழகுமுத்து பாண்டியன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்✍️முழுவிவரம்✍️ விண்மீன்நியூஸ்

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் 44 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனை பட்டா வழங்கி 14 ஆண்டுகள் ஆகியும், பட்டாவை கிராம அடங்கலில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள், அரசு உதவிகள் பெறுவதற்கும், வீடுகள் கட்டுவதற்கு வங்கி கடன்கள் பெறுவதற்கும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கிராம அடங்கலில் பதிவேற்ற வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் வக்கீல் அழகுமுத்து பாண்டியன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ் மற்றும் கார்த்திக், பரமசிவம், ராஜா, செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *