t

கேரளாவில் மனைவிகளை கைமாற்றும் கும்பல்,கும்பலில், முக்கிய பிரமுகர்கள் ✍️ 25 பேர் தீவிர கண்காணிப்பு✍️விசாரணையில் திடுக்கிடும் தகவல்✍️ கேவளமான கலாச்சார சீர்கேடு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

கேரளாவில் மனைவிகளை கைமாற்றும் கும்பலில் முக்கிய பிரமுகர்கள் ; 25 பேர் தீவிர கண்காணிப்பு: விசாரணையில் திடுக் தகவல்

advertisement by google

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணையில் கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றும் கும்பல் இருப்பது தெரியவந்தது.

advertisement by google

இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோட்டயம், கருகச்சால் என்ற இடத்தில் 6 பேரை கைது செய்தனர். இந்த கும்பல் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய விவரம்: கணவனுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்த 26 வயது இளம்பெண், கோட்டயம் அருகே கருகச்சாலை சேர்ந்தவர். அவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கணவருக்கு 32 வயது ஆகிறது. கணவனின் கட்டாயத்தின் பேரில் தான் இந்த இளம்பெண், மனைவிகளை கைமாற்றும் கும்பல் பயன்படுத்தும் சமூக இணையதள குரூப்பில் ேசர்ந்து உள்ளார். கடந்த 2 வருடமாக கணவனின் கட்டாயத்தின் ேபரில் வேறு சிலருடன் உறவு கொண்டுள்ளார்.

advertisement by google

இந்த கொடுமை தாங்க முடியாமல் தான் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். தன்னுடைய கணவர் பணத்திற்காகவும், மற்ற பெண்களுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்ற மோசமான ஆசையிலும் தான் இந்த குரூப்பை பயன்படுத்தி வந்ததாக கூறியுள்ளார். இந்த குரூப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளில் யாராவது ஒருவது வீட்டில் குடும்ப நண்பர்களை போல சந்தித்து கொள்வார்கள். குறைந்தது 3 முறையாவது இதுபோன்ற சந்திப்புகள் நடைபெறும். ஒருவரையொருவர் சந்தித்து நன்றாக பழகிய பிறகு உறவு கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வார்கள்.

advertisement by google

ஓட்டலில் சந்திப்பது பாதுகாப்பு இல்லை என்பதால், குரூப்பில் உள்ள யாராவது ஒருவர் வீட்டில் தான் கூடுவார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் மனைவிகளை கைமாற்றி கொண்டு உல்லாச உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் டெலிகிராம், மெசஞ்சர்களில் போலி ஐடிகளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பலில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்த 25 பேரை ரகசியமாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button