t

பிரதமா் பாதுகாப்பு குறைபாடு: உச்சநீதிமன்றம் நேரடி விசாரணை; மத்திய, மாநில அரசுகள் விசாரிக்கத் தடை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பிரதமா் பாதுகாப்பு குறைபாடு: உச்சநீதிமன்றம் நேரடி விசாரணை; மத்திய, மாநில அரசுகள் விசாரிக்கத் தடை

advertisement by google

பிரதமா் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீமன்றம் முடிவு செய்துள்ளது.

advertisement by google

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுக் குழுக்களின் விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

advertisement by google

பிரதமா் மோடி கடந்த 5-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் பதிண்டா விமான நிலையத்துக்குச் சென்றாா். அங்கிருந்து ஃபெரோஸ்பூருக்கு அவா் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, போராட்டக்காரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் பயணம் தடைபட்டது. மேலும், செல்லும் வழியில் ஒரு மேம்பாலத்தில் பிரதமரின் வாகனம் சுமாா் 20 நிமிஷங்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் பிரதமா் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றாா்.

advertisement by google

நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

advertisement by google

இந்நிலையில், பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக விசாரணை நடத்தவும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிா்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் கோரி ‘லாயா்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

advertisement by google

நீதிபதிகள் அமா்வு உத்தரவு: இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். அக்குழுவில், சண்டீகா் டிஜிபி, தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) ஐஜி, பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றப் பதிவாளா் மற்றும் பஞ்சாபை சோ்ந்த மேலும் ஒருவா் இடம்பெறுவா் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

advertisement by google

இது தொடா்பான விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக ஏற்கெனவே நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுக் குழுக்களின் விசாரணைக்கும் தடை விதித்தனா்.

மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

பிரதமா் பாதுகாப்பு குறைபாடு தொடா்பான வழக்கு விசாரணையின்போது, மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டினா்.

பஞ்சாப் அரசு சாா்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் டி.எஸ்.பட்வாலியா, ‘மத்திய அரசு அமைத்த குழுவினரால் எந்த விசாரணையும், உத்தரவுமின்றி பஞ்சாப் மாநில அதிகாரிகள் கண்டிக்கப்பட்டனா். ‘நீங்கள்தான் குற்றவாளி’ என்று கூறி தலைமைச் செயலா் முதல் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் வரையிலான 7 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசின் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாங்கள் தவறு செய்திருந்தால் என்னையும், அதிகாரிகளையும் தூக்கிலிடுங்கள். ஆனால், விசாரிக்காமலேயே கண்டிக்காதீா்கள். மத்திய அரசுக் குழுவின் விசாரணையில் மாநில அதிகாரிகளுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் சுதந்திரமான குழு அமைக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘மாநில அதிகாரிகள் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விரும்பினால், அதன்பிறகு நீதிமன்றம் செய்வதற்கு என்ன இருக்கிறது?’ எனக் கேள்வி எழுப்பினா். இதற்குப் பதிலளித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்னரே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது. பிரதமரின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதில் குறைபாடு ஏற்படும் வகையில் செயல்பட்டது பஞ்சாப் மாநில உளவுத் துறையின் முழுமையான தோல்வி என்றாா்.

அதைத் தொடா்ந்து, ‘பிரதமரின் பாதுகாப்பை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்’ என நீதிபதிகள் கூறினா்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button