இந்தியாதமிழகம்

திமுக கட்சியின், ஐ.டி. அணி பதவியை பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா?✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திமுக ஐ.டி. அணி பதவியை பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா?

advertisement by google

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலின்போது தங்களுக்கு பணியாற்றுவதற்காக தனியார் தகவல் தொழில்நுட்ப முகமைகளை நியமித்துக் கொள்கின்றன. கட்சிகளிலும் விவசாய அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி போலதற்போது தகவல் தொழில்நுட்ப அணிகளும் உருவாகி வருகின்றன. இந்த அணிக்கு அதிக முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.

advertisement by google

திமுகவில் கடந்த 2017-ல் தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்டது. அதன் செயலாளராக பொருளாதார வல்லுநரும், தற்போதைய நிதியமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். 2021 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்ததில் தகவல் தொழில்நுட்ப அணிக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

advertisement by google

தற்போது திமுக ஆட்சியில் முக்கியமான துறையான நிதித்துறையின் அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கடந்த10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நிதிநிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டறிதல், பட்ஜெட் தாக்கல்செய்தல், நிதி நிலைமையை கண்காணித்தல், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் தமிழக அரசின்கோரிக்கைகளை புள்ளிவிவரங்களுடன் முன்வைத்தல், அரசுத் துறைகள் கோரும் நிதியை விரிவாக பரிசீலித்து ஒப்புதல் அளித்தல் என நிர்வாக ரீதியாக அதிக நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் பழனிவேல் தியாகராஜன் உள்ளார்.

advertisement by google

இந்த சூழலில் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

advertisement by google

இதுபற்றி கட்சித் தலைமையிடம் பழனிவேல் தியாகராஜன் சில நாட்களுக்கு முன்பு கடிதம்அளித்ததாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

டிஆர்பி ராஜாவுக்கு..

அந்த கடிதத்தின் மீது இன்னும்நடவடிக்கை எடுக்காத நிலையில்,மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜாவுக்கு தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை தற்காலிகமாக வழங்ககட்சித் தலைமை முடிவெடுத்துஇருப்பதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் திமுகவட்டாரங்கள் தெரிவித்தன.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button