கல்வி

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’ வகுப்பறையில் ஆசிரியர் கேள்வி கேட்டார்✍️அதற்கு மாணவர்களின் சிரிப்பலை பதில்கள்✍️கல்வி கேள்வி பதில்கள்?விண்மீன் நியூஸ்

advertisement by google

’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’

advertisement by google

-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

advertisement by google

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாகத் தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.

advertisement by google

”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.

advertisement by google

”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லி விட்டு நக்கலாய்ச் சிரித்தான் வேறொரு மாணவன்.

advertisement by google

”தான் பயணித்த தேரை ஒரு முல்லைக் கொடிக்காக விட்டு விட்டு தான் நடந்து செல்லத் துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.

advertisement by google

”முதலில் தேர் செய்ததே மரத்தில் தான், மரத்தை வெட்டித் தேர் செய்து விட்டு கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.

advertisement by google

செயல் ஒன்று தான்… எத்தனை எத்தனைப் பார்வை. எத்தனை எத்தனைக் கண்ணோட்டம்.

ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.

இப்படித் தான் நமது செயல்களைப் பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.
அதனாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே சிறப்பு.

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வாழ்த்துகள். இந்நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகிறேன்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button