உறவுகள்பயனுள்ள தகவல்

பள்ளமும், மேடும் வாழ்க்கை என்றால் வேதனைகளும், சோதனைகளும் இருக்குமோ✍️ துன்பம் என்னு சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்ட முடியுமா…✍️முழுக் கருத்தியல் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மேடும் பள்ளமும் . .

advertisement by google

வாழ்க்கை என்றால் வேதனைகளும், சோதனைகளும் இருக்கத்தான் செய்யும். துன்பம் என்னு சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்டவேண்டும்…

advertisement by google

ஆம்!, வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், எதிர்நீச்சல் போடத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்…

advertisement by google

வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கில்லை. அதில் மேடு பள்ளமும், சுழியும் பாறைகளும் நிறைந்துதான் இருக்கும்…

advertisement by google

வாழ்க்கைப் படகை ஓட்டிச்செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும், பாறையில் மோதி விடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பைப் பயன்படுத்த வேண்டும்…

advertisement by google

பேரறிஞர் பெர்னாட்சாவிடம் ஒருவர் வந்து,

advertisement by google

‘நான் பத்து முயற்சி செய்தால் ஒன்று தான் கைகூடுகின்றது. பத்தும் பலன் தரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்…?” என்று கேட்டபோது. நீ நூறு முயற்சிகள் செய். பத்தும் பலன் தரும் என்றார்…

advertisement by google

ஆம் நண்பர்களே

நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான காரியங்களையும் பழகக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில்!, வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. ஆகையால்!, அனைத்து சூழல்களுக்கும் நம்மை தயார்ப்படுத்திக்கொள்வது நல்லது.

வெற்றிபெற்ற மனிதர்களுக்குப் பின்னால் தோல்வி முகங்கள் பல உண்டு, இன்பங்களும், துன்பங்களும், வருத்தங்களும், மகிழ்ச்சிகளும், வெற்றிகளும்,தோல்விகளும், ஏற்றங்களும், இறக்கங்களும், மேடுகளும், பள்ளங்களும் கலந்ததுதான் வாழ்க்கை.

வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் என்ற இரண்டு மட்டும் இல்லை, இருந்த இடத்திலேயே அதாவது ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் இருந்த இடத்திலே இருப்பதும் ஒரு நிலையாகும். ஏற்றம் அடைவது மட்டும் சாதனையல்ல; இன்றைய வேகமான, போட்டி மிகுந்த, போராட்டம் மிகுந்த வாழ்க்கைச் சூழலில் வீழ்ச்சியடையாமல் இருப்பதும் ஒரு சாதனைதான்.

இந்த கோரோனா தீநுண்மியின் காலம் அதையும் நமக்கு உணர்த்தி வருகிறது. இருக்கும் நிலையை விட கீழே சென்று விடாமல், வீழ்ச்சியடைந்து விடாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதும் சாதனையாகவே கருதப்பட வேண்டும். ஏற்றம் வந்தாலும், சரிவு வந்தாலும் ஒரே தன்மையுடன் அவைகளை ஏற்றுக் கொண்டு, வாழ்வில் வெற்றி காண வேண்டும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button