கோவில்பட்டியில்15 வயது சிறுமியை திருமணம் செய்து,கர்ப்பிணியாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

கோவில்பட்டியில்15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கியடிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் 15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இலந்தப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிகுமார் (வயது 27). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரி குமாரை கைது செய்தார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *