இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

BSNL டவருக்கு பேட்டரி மாற்ற காசில்லை✍️ தஞ்சாவூரில் பரிதாப நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவணம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

BSNL டவருக்கு பேட்டரி மாற்ற காசில்லை: பரிதாப நிலையில் பி.எஸ்.என்.எல்.,*

advertisement by google

தஞ்சாவூர்: ‘மொபைல் போன் டவருக்கு பேட்டரி மாற்றக் கூட நிதியில்லை’ என பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

advertisement by google

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளார். அப்போது, ‘கரன்ட் நின்ற அடுத்த நிமிஷமே, மொபைல் டவர் ஆப் ஆகி விடுகிறது. சிக்னல் மீண்டும் வர பல மணி நேரம் ஆகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பிரச்னை தொடர்கிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.தஞ்சாவூர் மட்டுமின்றி, பல மாவட்டங்களிலும் இந்த புகார்கள் உள்ளன.

advertisement by google

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் 330 டவர்கள் உள்ளன. அதில் பேட்டரி பேக்கப், ஜெனரேட்டர் அமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது பல பேட்டரிகள் பழுதடைந்து, புதிய பேட்டரி மாற்ற வேண்டிய நிலையில் உள்ளன.ஜெனரேட்டரும் பழுதுடைந்துள்ளது. ‘மேனுவல்’ முறையில் இயங்கக் கூடிய ஜெனரேட்டரை, ஆப்பரேட் செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அவர்களும் வருவது இல்லை.

advertisement by google

ஜெனரேட்டருக்கு டீசல் வாங்க முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது.தனியார் இடங்களில் டவர்களுக்கு 10 மாதங்களாக வாடகை வழங்காத நிலையில், உரிமையாளர்கள் நெருக்கடி வேறு உள்ளது.புதிய பேட்டரி மற்றும் ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் அமைக்க தேவையான நிதியை ஒதுக்குமாறு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சருக்கு பல முறை கடிதம் அனுப்பியும் பலன் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button