திருப்பூர் வெள்ளகோவிலில்,மனைவியை கடப்பாறையால் அடித்துக் கொன்ற கட்டிட தொழிலாளி✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

மனைவியை கடப்பாறையால் அடித்துக் கொன்ற கட்டிட தொழிலாளி

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் மனைவியை கடப்பாறையால் அடித்துக்கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

பெண்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் வயது 65. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி 55. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலைவழக்கம் போல் பூங்கொடி மில் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த குருநாதன், மனைவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர்களுடைய வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு ஓடி வந்தனர்.

அடித்துக்கொலை

அப்போது வீட்டிற்குள் இருந்து குருநாதன் பதற்றத்தில் வெளியே ஓடினார். இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் பூங்கொடி இறந்து கிடந்தார். அவர் அருகில் கடப்பாறை கிடந்தது. குருநாதன் தனது மனைவி பூங்கொடியை கடப்பாறையால் தாக்கி கொன்று விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பூங்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகிறார்கள். பூங்கொடியை எதற்காக கொலை செய்தார் என்ற விவரம் அவரை கைது செய்தால்தான் தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள். வேலைக்கு சென்று வீடு திரும்பிய மனைவியை கடப்பாறையால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *