விருதுநகர் அருகே கேந்தி பூ விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

கேந்தி பூ விலை குறைவு; விவசாயிகள் வேதனை

விருதுநகர்,

விருதுநகர் அருகே கேந்தி பூ விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கேந்தி சாகுபடி

விருதுநகர் அருகே கூரைக் குண்டு கிராமத்தில் குல்லூர் சந்தை அணையை ஒட்டிய பகுதிகளில் விவசாயிகள் கேந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர். அணையை ஒட்டியுள்ள பகுதியில் வேலி போட முடியாத நிலையில் பிற பயிர் சாகுபடி செய்தால் மான்கள் பயிர்களை சேதப்படுத்தி விடுவதால் கேந்தி பூ சாகுபடி செய்வதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால் கேந்தி பூக்களுக்கு விலை இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

விவசாயிகள் வேதனை

இதுபற்றி கேந்தி பூ சாகுபடி செய்துள்ள விவசாயி திருப்பதி கூறியதாவது:-

ஒரு நாற்று ரூ.3 வீதம் நாற்று நட்டுள்ளோம். எங்கள் குடும்பத்தாரே விவசாய வேலை செய்து வருகிறோம். ஆனாலும் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாத நிலையே உள்ளது. திருமண காலங்களில் கிலோ ரூ.60 வரை விற்பனையாகும் நிலையில் மற்ற நாட்களில் கிலோ ரூ.10 அல்லது ரூ.20-க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. சில நேரங்களில் விலை கிடைக்கவில்லையெனில் பூக்களை அப்படியே விட்டுவிட்டு வரும் நிலையும் ஏற்படுகிறது.

இப்பகுதியில் வேறு பயிர் சாகுபடி செய்ய வாய்ப்பில்லாத நிலையில் கேந்தி பூ சாகுபடி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *